Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் கருவிக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

தற்போது ரூ.1,410 விலைகுறைப்பு நிகழ்த்தப்பட்டு சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம்ஆனது ரூ.13,490/- என்ற விலையில் கிடைக்கும்.

By Muthuraj

சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் கருவியின் 32 ஜிபி மாறுபாடு ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளதாக, மும்பை மொபைல் போன் விற்பனையாளரான மகேஷ் டெலிகாம் நிறுவனத்தின் மனிஷ்கட்ரி தெரிவித்துள்ளார்.

சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் கருவிக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

தற்போது ரூ.1,410 விலைகுறைப்பு நிகழ்த்தப்பட்டு சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம்ஆனது ரூ.13,490/- என்ற விலையில் கிடைக்கும். கேலக்ஸி ஜே7 ப்ரைம் (32ஜிபி) ரூ.14,900/- என்ற விலை நிர்ணயத்தில் கடந்த மாதம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகியுள்ள விலைகுறைப்பு தகவல் ஆனது சமூக ஊடக தளங்கள் (ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர்) வெளியே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் சாம்சங் நிறுவனத்திடமிருந்து எந்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலும் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் சாதகமானது தங்கம் மற்றும் கருப்பு நிறத்தில் வருகிறது.

அம்சங்களை பொறுத்தமட்டில், சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் ஒரு முழு உலோக பாடியும், 5 இன்ச் எச்டி (720பி) டிஸ்ப்ளே, 2 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ள எக்ஸிநோஸ் க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. கேலக்ஸி ஜே5 ப்ரைம் ஆனது 32 ஜிபி உள் நினைவகத்துடன் வருகிறது மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை மெமரி விரிவாக்க ஆதரவும் வழங்கும். ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயக்க முறைமையில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 2400 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் கருவிக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

கேமராவை பொறுத்தவரை கேலக்ஸி ஜே5 ப்ரைம் எப் / 1.9 துளை மற்றும் ஒரு எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அரட்டைகளுக்ககான எப் / 2.2 துளை கொண்ட 5 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு கைரேகை சென்சார் உள்ளது அது ஹோம் பொத்தானுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட்களை வழங்குகிறது, 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்டு ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J5 Prime 32GB reportedly gets a price cut. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X