விரைவில்: கேலக்ஸி ஜே5 ப்ரைம் (2018); என்னென்ன எதிர்பார்க்கலாம்.?

இந்த பட்டியல் மூலம் எந்தவிதமான பிரதான விவரக்குறிப்புகளும் வெளியிடப்படவில்லை.

|

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜே5 ப்ரைம் (2018) ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் எப்சிசி சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஸ்மார்ட்போன் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று அர்த்தம்.

விரைவில்: கேலக்ஸி ஜே5 ப்ரைம் (2018); என்னென்ன எதிர்பார்க்கலாம்.?

வெளியான அறிக்கைகளின் படி இந்த சாதனமானது, ரேடியோ, டிவி, கம்பி, செயற்கைக்கோள் மற்றும் கேபிள் மூலம் மாநிலங்களுக்கு மற்றும் சர்வதேச தகவல்தொடர்பை ஒழுங்குபடுத்தும் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனின் (FCC) அனைத்து தேவையான ஒப்புதலும் கிடைத்துள்ளது.

மாடல் எண் எஸ்எம்-ஜி571

மாடல் எண் எஸ்எம்-ஜி571

ஆண்ட்ராய்டுசர்ச் வழியாக வெளியான இந்த எப்சிசி ஆவணமானது, எஸ்எம்-ஜி571 என்ற மாடல் எண் பெயரை தவிர வேறெந்த தகவலையும் வெளிப்படத்தவில்லை. இந்த பட்டியல் மூலம் எந்தவிதமான பிரதான விவரக்குறிப்புகளும் வெளியிடப்படவில்லை.

அகற்றக்கூடிய பேட்டரி

அகற்றக்கூடிய பேட்டரி

எனினும், கூறப்படும் கேலக்ஸி ஜே5 ப்ரைம் ஆனது ஒரு அகற்றக்கூடிய பேட்டரி மூலம் வரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. எப்சிசி வலைதளம்படி இக்கருவி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 4.2, வைஃபை மற்றும் ஜிபிஎஸ் போன்ற இணைப்பு அம்சங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

ஐந்து விரல் சைகை ஆதரவு

ஐந்து விரல் சைகை ஆதரவு

முந்தைய ஜிஎப்எக்ஸ்பெஞ்ச் பட்டியலின்படி, சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் (2018) ஆனது 1280x720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டிருக்கலாம் மற்றும் ஐந்து விரல் சைகை ஆதரவு கொண்ட 4.8 அங்குல டிஸ்பிளே கொண்டிருக்கலாம்.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

மேலும் இக்கருவியில், சாம்சங் நிறுவனத்தின் சொந்த எக்ஸிநோஸ் 7570 1.4 ஜிஹாஹ்ஸ்ரட்ஸ் க்வாட்கோர் ப்ராசசர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி உள் சேமிப்பு, மாலி டி720 ஜிபியூ மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் ஆகிய அம்சங்கள் இடம்பெறலாம்.

12 மெகாபிக்சல் பின்புற கேமரா

12 மெகாபிக்சல் பின்புற கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், கேலக்ஸி ஜே5 பிரைம் (2018), ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் எல்இஇ ஃபிளாஷ் கொண்ட ஒரு 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்பீக்களுக்கான ஒரு 8 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கலாம்.

ஆக்சலேரோமீட்டர் மற்றும் ஜிரோஸ்கோப்

ஆக்சலேரோமீட்டர் மற்றும் ஜிரோஸ்கோப்

மேலும் ஜிஎப்எக்ஸ்பெஞ்ச் பட்டியலின்படியும், இக்கருவி ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் வைஃபை போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் ஆக்சலேரோமீட்டர் மற்றும் ஜிரோஸ்கோப் போன்ற சென்சார்கலும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J5 Prime (2018) passes through FCC, might be announced soon. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X