வரிசைக்கட்டும் சாம்சங் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்; ரசிகர்கள் ஹேப்பி.!

|

மாடல் எண் எஸ்எம்-ஜி570 என்ற பெயரின் கீழ் காணப்பட்ட கருவியானது சாம்சங் கேலக்ஸி ஜே5 பிரைம் (2016) ஆக கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. தற்போது மாடல் எண் எஸ்எம்-ஜி571 என்றவொரு புதிய சாதனம் ஜிஎப்எக்ஸ்பெஞ்ச் தரசான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது.

இக்கருவி அடுத்த வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி ஜே5 ப்ரைம் (2017) ஸ்மார்ட்போனாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக ஊகிக்கப்படுகிறது. வெளியான பட்டியலின் படி, இந்த ஸ்மார்ட்போன் 720 x 1280 என்ற பிக்சல்கள் அளவிலான எச்டி தீர்மானம் ஆதரவு கொண்ட 4.8 அங்குல டிஸ்பிளே கொண்டுள்ளது.

3ஜிபி ரேம்.!

3ஜிபி ரேம்.!

மேலும் இக்கருவி எக்ஸிநோஸ் 7570 சிப்செட், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் உடனான க்வாட் கோர் ப்ராஸசர் மற்றும் 3ஜிபி அளவிலான ரேம் கொண்டு இயங்குகிறது. கூறப்படும் கேலக்ஸி ஜே5 ப்ரைம் (2017) ஸ்மார்ட்போனின் உள்ளடக்க சேமிப்பை பொறுத்தமட்டில் 32 ஜிபி ஆகும்.

13 மெகாபிக்சல் பின்புற கேமரா.!

13 மெகாபிக்சல் பின்புற கேமரா.!

ஒளியியலை பொறுத்தமட்டில், இது 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டு வரும் மற்றும் முன்பக்கம் ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டு வருமென என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கேமராக்கள் முழு எச்டி பதிவு ஆதரவையும் வழங்கும்.

வெளியீடு தேதி சார்ந்த விவரம் இல்லை.!

வெளியீடு தேதி சார்ந்த விவரம் இல்லை.!

கேலக்ஸி ஜே5 ப்ரைம் (2016) ஸ்மார்ட்போனின் 5 அங்குல டிஸ்பிளே என்பதை தவிர மாடல் எண் எஎஸ்எம்-ஜி571 தொலைபேசிக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. மேலும் வெளியான பட்டியலில் எந்தவிதமான வெளியீடு தேதி சார்ந்த விவரமும் இல்லை.

இக்கருவியின் முன்னோடி மாதிரி.!

இக்கருவியின் முன்னோடி மாதிரி.!

கடந்த ஆண்டு இதே மாதத்தில் தான் இக்கருவியின் முன்னோடி மாதிரியானது தொடங்கப்பட்டது என்பதால், கேலக்ஸி ஜே5 ப்ரைம் (2017) ஸ்மார்ட்போனும் மிக விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த தென் கொரிய நிறுவனம் அதன் 2017 ஆண்டிற்கான முன்னணி போன்களை வெளியிட்டுள்ளது.

மலிவான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும்.!

மலிவான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும்.!

ஆக, சாம்சங் நிறுவனத்தின் அடுத்தகட்ட பணிகள் மலிவான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தப்படுவதில் தான் இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே கேலக்ஸி ஏ5 மற்றும் கேலக்ஸி ஏ7 ஆகிய கருவிகளின் 2018 பதிப்புகள் பற்றிய விவரங்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஆக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வாங்கும் திட்டம் கொண்டுள்ளவர்கள் சற்று பொறுமை காக்கவும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J5 Prime (2017) Key Specs Leaked on GFXBench. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X