Home
Mobile

வெளியீட்டிற்கு முன்பே விற்பனைக்கு வந்தது கேலக்ஸி ஜே5 (2017).!

தற்போது பல ஜெர்மன் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கான முன்பதிவுகளுக்கு கிடைக்கிறது.

By Muthuraj

சாம்சங் கேலக்ஸி ஜே5 (2017) ஸ்மார்ட்போன் ஆனது அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பாக இப்போது ஜெர்மனிய சில்லறை வலைத்தளங்களில் வெளிவந்திருக்கிறது. கேலக்ஸி ஜே5 (2017) தற்போது பல ஜெர்மன் ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கான முன்பதிவுகளுக்கு கிடைக்கிறது.

வெளியீட்டிற்கு முன்பே விற்பனைக்கு வந்தது கேலக்ஸி ஜே5 (2017).!

ஜெர்மானிய வலைத்தளமான கானட் வலைதளத்தின்கீழ், இரட்டை சிம் சாம்சங் கேலக்ஸி ஜே5 (2017) ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் டச்விஸ் 2017 உடன் இயங்குகிறது மற்றும் 5.2 அங்குல எச்எச்டி (720x1280 பிக்சல்கள்) சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும இந்த ஸ்மார்ட்போன் 2ஜிப் ஐபி ரேம் உடன் இணைந்த ஒரு ஆக்டா-கோர் எக்ஸிமோஸ் 7870 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ஒளியியல் அடிப்படையில், கேலக்ஸி ஜே5 (2017) ஆனது எப்/1.7 துளை மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் முன்பக்கம் ஒரு 13 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. கேலக்ஸி ஜே5 (2017) மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் வருகிறது.

4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், மைக்ரோ- யூஎஸ்பி 2.0 போர்ட், என்எஃப்சி மற்றும் ஒரு 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்ட இக்கருவி ஒரு 3000எம்ஏஎச் நீக்கக்கூடிய அல்லாத பேட்டரி, அளவீடுகளில் 146.3x71.3x7.8மிமீ மற்றும் 158 கிராம் எடையும் கொண்டுள்ளது.

வெளியீட்டிற்கு முன்பே விற்பனைக்கு வந்தது கேலக்ஸி ஜே5 (2017).!

சாம்சங் கேலக்ஸி ஜே5 (2017) ஸ்மார்ட்போன் ஆனது சுமார் ரூ.20,200/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளதை ப்ரீ ஆர்ட்ர் இணையத்தளத்திலிருந்து அறியப்படுகிறது.

மறுபக்கம் சாம்சங் கேலக்ஸி ஜே7 (2017) பற்றி வெளியான தகவலின் கீழ் அக்கருவி 5.5 அங்குல முழு எச்டி சூப்பர் அமோஎல்இடிடிஸ்ப்ளே, 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி, 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்பு, 3300எம்ஏஎச் முதல் 3600எம்ஏஎச் திறனுக்குள்ளான பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் கேலக்ஸி ஜே5 (2017) ஸ்மார்ட்போன் சுமார் ரூ.24,600/- என்ற புள்ளியை சுற்றி இருக்கலாம் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J5 (2017) Gets Listed by Online Retailers Ahead of Official Launch. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X