இந்தியா: அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி J4.!
ரூ.9990 என்ற விலையில் அறிமுகமான இந்த போன் சில நாட்களிலேயே ரூ.500 குறைக்கப்பட்டு தற்போது ரூ.9490 என்ற விலையில் கிடக்கின்றது.
சாம்சங் நிறுவனத்திற்கு தற்போது சற்று நேரம் சரியில்லாமல் இருப்பது போல் தெரிகிறது. கடந்த மாதம் சாம்சங் நிறுவனத்தின் ஆறு மாடல் ஸ்மார்ட்போன்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு சாம்சங் கேலக்ஸி மாடல் ஸ்மார்ட்போனின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலான கேலக்ஸி J4 மாடலின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக மும்பையை சேர்ந்த மகேஷ் டெலிகாம் என்ற ரீடெயில் நிறுவனம் தெரிவித்டுள்ளது. ரூ.9990 என்ற விலையில் அறிமுகமான இந்த போன் சில நாட்களிலேயே ரூ.500 குறைக்கப்பட்டு தற்போது ரூ.9490 என்ற விலையில் கிடக்கின்றது. இந்த புதிய விலையில் தற்போது இந்த மாடல் அமேசான் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இ-ஸ்டோர்களில் கிடைக்கின்றது
சாம்சங் கேலக்ஸி J4 மாடலின் தன்மை குறித்து பார்த்தோம் என்றால் இந்த மாடல் 5.5 இன்ச் HD டிஸ்ப்ளேவை கொண்டதுடன் 720x1280 பிக்சல் ரெசலூசனை கொண்டது. இந்த நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான எக்சினோஸ் 7570 என்ற குவாட்கோர் பிராஸசரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக்கூடியது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது. மேலும் ஸ்டோரேஜ் தேவை என்றால் 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி கொள்ளலாம்

இந்த மாடலின் முக்கிய அம்சமாக 13எம்பி பின்பக்க கேமிரா உள்ளது. அதேபோல் 5எம்பி செல்பி கேமிராவும் நல்ல தரத்தில் உள்ளது. இரண்டு கேமிராக்களும் எல்.இ.டி பிளாஷ் சப்போர்ட் செய்யும் என்பதால் குறைவான வெளிச்சத்திலும் பளிச் என்ற புகைப்படங்களை எடுக்கலாம்.
மேலும் இந்த மாடலில் 'அட்வான்ஸ் மெமரி மேனேஜ்மெண்ட்' என்ற வசதி உள்ளது. இதன் முலம் பயனாளிகளின் பல வீடியோ, புகைப்படங்கள் மற்றும் டாக்குமெண்டரிகளை தானாகவே சேமித்து வைக்க முடியும். அதேபோல் டூப்ளிகேட் இமேஜ்களை கண்டறிந்து தானாகவே அழித்துவிடும் தன்மை இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரே மாதிரியான புகைப்படங்கள் அடிக்கடி வந்தால் அதன் டூப்ளிகேட் இமேஜ்கள் தானாகவே டெலிட் செய்யப்படும்

சாம்சங் மால் என்ற வசதி இருப்பதால் இகாமர்ஸ் இணையதளங்கலில் இருந்து நமக்கு தேவையான பொருட்களை இந்த வசதி மூலம் வாங்கி கொள்ளலாம். மேலும் இந்த மாடலில் 3000 mAh பேட்டரி, 4ஜி, வோல்ட்டி, 3ஜி, வைபை, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் கனெக்சன் வசதி ஆகியவைகளும் உண்டு.


Click it and Unblock the Notifications