பட்ஜெட் விலையில் அசத்த விரைவில் வரும் சாம்சங் ஸ்மார்ட் போன்கள்.!
இந்தியாவில் சாம்சங் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் நவீன காலத்திற்கு ஏற்பவும் விதவிதமான மாடல்களையும், புதிய தொழில்
இந்தியாவில் சாம்சங் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் நவீன காலத்திற்கு ஏற்பவும் விதவிதமான மாடல்களையும், புதிய தொழில் நுட்பங்களையும் ஸ்மாரட் போன்களில் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த வகையில், சாம்சங் நிறுவனம் லேக்ஸி போனில் ஜே3 பிரைம், கேலக்ஜி ஜே6 ஸ்மார்ட் போன்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வியட்நாமில் வெளியீடு:
சாம்சங் கேலக்ஸி ஜே4 பிரைம் கேலக்ஜி ஜே6 பிரைம் ஸ்மார்ட்போன்கள் வியட்நாம் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் எஸ்எம்-ஜே415எப்/டிஎஸ், எஸ்எம்ஜே610எப்/டி என்ற மாடல் நம்பர்களை கொண்டுள்ளன.

பட்ஜெட் விலை:
சாம்சங் கேலக்ஸி ஜே 3 பிரைம் மற்றும் கேலக்ஸி ஜே6 மாடல் போன்கள் பட்டெஜட்விலையில் விற்பனை வரும் என்று கூறப்படுகின்றது. இந்த போன்கள் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், குவால்காம் பிராஸர்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

5.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே:
இந்த மாடல் ஸ்மார்ட்போன் நெதர்லாந்து, வியட்நாம் நாட்டு வளைத்தளங்களில் வெளியானது. ஏற்கனவே வெளியான சாம்சங் கேலக்ஸி ஜெ4 மாடலில் 5.5 இன் ஹெச்டி பிளாஸ் 720x1280 பிக்சல் சூப்பர் அமோல்டு பேனல், 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கின்றது.

3000 எம்ஏஹெச் பேட்டரி:
இத்துடன் குவாட்-கோர் சாம்சங் எக்சைனோஸ் 7570 சிப்செட் 2ஜிபி/3 ஜிபி ரேம், 16 ஜிபி/32 ஜிபி மெமரி, புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா, 3000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

லேக்ஸி ஜே6 மெமரி:
கேலக்ஸி ஜே6 மெமரி போனில் 5.6 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் அமோல்டு பேனல், 18:5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, இன்பினிட்டி, டிஸ்ப்ளே வடிவமைப்பு கொண்டுள்ளது. இதில் எச்சைனோஸ் 780 பிராசஸர் 3 ஜிபி/ 4 ஜிபி ரேம், 32 ஜிபி/64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட:டுள்ளது. புகைப்படங்கள் எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications