பட்ஜெட் விலையில் கேலக்ஸி ஜே4 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.!
சாம்சங் கேலக்ஸி ஜே4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் இப்போது கேலக்ஸி ஜே4 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஜே6 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் வரும் செப்டம்பர் 25-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஜே4 பிளஸ்
சாம்சங் கேலக்ஸி ஜே4 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1480 பிக்சல் திர்மானம் மற்றும் 18.5:9 திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே4 பிளஸ் கேமரா:
சாம்சங் கேலக்ஸி ஜே4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவாட்-கோர் 1.4ஜிகாஹெர்ட்ஸ் செயலி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேலக்ஸி ஜே6 பிளஸ் :
கேலக்ஸி ஜே6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1480பிக்சல் திர்மானம் மற்றும் 18.5:9 திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேலக்ஸி ஜே6 பிளஸ் கேமரா:
சாம்சங் கேலக்ஸி ஜே4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவாட்-கோர் 1.4ஜிகாஹெர்ட்ஸ் செயலி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.குறிப்பாக கேலக்ஸி ஜே4 பிளஸ் சாதனத்தின் விலை மதிப்பு ரூ.10,990-ஆக இருக்கிறது, பின்பு கேலக்ஸி ஜே6 பிளஸ் சாதனத்தின் விலை மதிப்பு ரூ.15,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications