இன்பினிட்டி டிஸ்பிளே உடன் கேலக்ஸி ஜே4 (2018) : அம்சங்கள் மற்றும் வெளியீடு.!
முன்னதாக, கேலக்ஸி ஜே4 (2018) ஸ்மார்ட்போனின் ரியல் லைஃப் புகைப்படங்கள் வெளியாகி அதன் இருப்பை உறுதி செய்தது.
முன்னதாக, கேலக்ஸி ஜே4 (2018) ஸ்மார்ட்போனின் ரியல் லைஃப் புகைப்படங்கள் வெளியாகி அதன் இருப்பை உறுதி செய்தது. தற்போது அதன் சில அதிகாரபூர்வமான புகைப்படங்கள் வெளியாகி அதன் வெளியீடு மிக அருகாமையில் இருப்பதை உறுதி செய்துள்ளது.

ஆம், கேலக்ஸி ஜே4 (2018) ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடானது வருகிற மே 21 ஆம் தேதி அன்று, கேலக்ஸி ஜே6 (2018) ஸ்மார்ட்போனுடன் இணைந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுவாரசியம் என்னவெனில், கேலக்ஸி ஜே4 (2018) ஆனது ஒரு இன்னினைட்டி டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5.5 இன்ச் டிஸ்ப்ளே.!
வெளியான தகவலின்படி, கேலக்ஸி ஜே4 ஆனது ஒரு 16: 9 AMOLED டிஸ்ப்ளே கொண்டு இருக்கும் என்பதும், அது 5.5 இன்ச் என்கிற அளவீட்டை கொண்டிருக்கும் என்பதும் தெரியவருகிறது. கீழ் இடம்பெற்று இருக்கும் கெப்பாசிட்டி பட்டன்கள் மட்டும் இல்லை என்றால் இது கடந்த ஆண்டு வெளியான மோட்டோ ஜி5 போன்றே இருக்கும்.

கைரேகை ஸ்கேனர்.!
இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் ஒரு கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது. இதுவொரு இன்பில்ட் டிஸ்பிளே ஸ்கேனரும் அல்ல, பின்புற ஸ்கேனரும் அல்ல, இது கெப்பாசிட்டிவ் பட்டனில் உட்பொதிக்கப்ட்டுள்ளது. அதாவது நடுவில் ஸ்கேனரும், இடது மற்றும் வலது பக்கங்களில் நேவிகேஷன் பட்டன்களையும் கொண்டுள்ளது.

13 மெகாபிக்சல் லென்ஸ்.!
இது எல்இடி ஃப்ளாஷ் உடன் இணைந்திருக்கும் ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ சென்சாரை கொண்டிருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். பின்பக்கத்தை பொறுத்தவரை ஒரு 13 மெகாபிக்சல் லென்ஸ் கொண்டு இருக்கலாம். கேமரா அமைப்பை பொறுத்தவரை, இது சாம்சங் எஸ்9 ஸ்மார்ட்போனில் இருப்பது போன்றே சாதனத்தின் பின்புற நடுவில் அமைந்துள்ளது.

3,000 mAh பேட்டரி.!
இதர அம்சங்களை பொறுத்தவரை, கேலக்ஸி ஜே4 (2018) ஸ்மார்ட்போன் ஆனது, ஒரு 1.4ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸிநோஸ் 7570 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு 2 ஜிபி அல்லது 3 ஜிபி ரேம் உடனான 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டிருக்கலாம், மெமரி விரிவாக்க ஆதரவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நுழைவு நிலை ஸ்மார்ட்போனுக்கு தேவையான ஒரு 3,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications