அதிகாரப்பூர்வ அறிவிப்பு : சாம்சங் கேலக்ஸி ஜே3, ஜே5 மற்றும் ஜே7 (2017) அம்சங்கள்.!

Written By:

சமீப காலமாக வெளியாகி கொண்டிருந்த கேலக்ஸி ஜே (2017) தொடரில் சாம்சங் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய போதுமான வதந்திகள் மற்றும் கசிவுகளுக்கு முற்றிப்புள்ளி வயதாகிவிட்டது. அதாவது சாம்சங் நிறுவனம் இறுதியாக அதன் கேலக்ஸி ஜே3 (2017), கேலக்ஸி ஜே5 (2017) மற்றும் கேலக்ஸி ஜே7 (2017) ஆகிய புதிய கேலக்ஸி ஜே-தொடர் சாதனங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஒரு புதிய வெளியீட்டு எப்பொழுதும் உற்சாகமளிக்கும் என்கிற போதும், சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அதன் வழக்கமான ஸ்டைலான மற்றும் உயர் இறுதியில் குறிப்புகள் கொண்டு அதேசமயம் பட்ஜெட்-நட்பு விலையில் தான் இந்த ஜே தொடரின் கருவிகளும் உள்ளன என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
உலோக உட்புற வடிவமைப்பு

உலோக உட்புற வடிவமைப்பு

வெளியாகவுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் முன்னர் வெளியான லீக்ஸ் தகவலை உறுதிப்படுத்தும் வண்ணம் மெல்லிய உலோக உட்புற வடிவமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், கேலக்ஸி ஜே3 (2017), கேலக்ஸி ஜே5 (2017) மற்றும் கேலக்ஸி ஜே7 (2017) கருவிகள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வருகிறது.

மேம்பட்ட தொழில்நுட்பம்

மேம்பட்ட தொழில்நுட்பம்

நெதர்லாந்தின் சாம்சங் மொபைல் மார்கெட்டிங் மேலாளர் கெர்பென் வான் வால்ட் மெஜெர் கருத்துப்படி, "ஜே தொடரின் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் ஏற்கனவே இருக்கும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்கும்" என்று கூறியதை உறுதி செய்யும் வண்ணம் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் குறிப்புகள் உள்ளன.

கேலக்ஸி ஜே7 (2017)

கேலக்ஸி ஜே7 (2017)

கேலக்ஸி ஜே7 (2017) ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டு வருகிறது. உடன் இந்த ஸ்மார்ட்போன் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. உடன் இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமரா துறையை பொறுத்தம்மட்டில் இந்த சாதனம் 13 மெகாபிக்சல் முன் மற்றும் பின்புற கேமராக்கள் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஜே7 (2017) ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது மற்றும் 3600எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

கேலக்ஸி ஜே5 (2017)

கேலக்ஸி ஜே5 (2017)

கேலக்ஸி ஜே5 (2017) பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் 5.2 அங்குல எச்டி சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 2 ஜிபி ரேம் மற்றும் சேமிப்பு 16 ஜிபி கொண்ட 1.6ஜிகாஹெர்ட்ஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

பேட்டரி

பேட்டரி

இந்த கைபேசி 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது மற்றும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு வருகிறது. கேலக்ஸி ஜே7 (2017) போலவே, இந்த மாதிரியும் 13 மெகாபிக்சல் முன் மற்றும் பின்புற கேமராக்கள் கொண்டுள்ளது.

கேலக்ஸி ஜே3 (2017)

கேலக்ஸி ஜே3 (2017)

இறுதியாக, கேலக்ஸி ஜே3 (2017) ஒரு 1.4ஜிகாஹெர்ட்ஸ் செயலி இணைந்து 5 அங்குல எச்டி டிஎப்டி டிஸ்பிளே கொண்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு கொண்டுள்ளது. கேமரா துறையை பொறுத்தமட்டில் ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்கும் இக்கருவி 2400எம்ஏஎச் பேட்டரி ஆதரவை வழங்குகிறது.

விலை

விலை

விலை மற்றும் கிடைக்கும் தன்மை சார்ந்த விடயங்களை பொறுத்தவரை, சாம்சங் நிறுவனம் முதலில் கேலக்ஸி ஜே5 (2017) மாதிரியை ஐரோப்பாவில் இம்மாதம் வெளியிடுகிறது. கேலக்ஸி ஜே7 (2017) ஜூலை மாதத்திலும் மற்றும் கேலக்ஸி ஜே3 (2017) ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். எனினும், நிறுவனம் விலை மற்றும் கிடைக்கும் சந்தை பற்றிய விவரங்களை பகிர்ந்துக்கொள்ளவில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsung Galaxy J3, Galaxy J5, and Galaxy J7 (2017) officially introduced. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot