Home
Mobile

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே3(2018).!

இக்கருவி எக்ஸிநோஸ் 7570 குவாட்-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையா கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் விரைவில் பட்ஜெட் விலையில் இந்த கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன் மாடல்.

5 விரல் சைகை ஆதரவு:

5 விரல் சைகை ஆதரவு:

கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போனில் 5 விரல் சைகை ஆதரவு கொண்ட தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1280 x 720பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

2 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸிநோஸ்:

எக்ஸிநோஸ்:

இக்கருவி எக்ஸிநோஸ் 7570 குவாட்-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையா கொண்டு வெளிவரும்
எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:

8எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J3 2018 found listed on Geekbench ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X