5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஜே3(2018).!
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
தற்சமயம் சாம்சங் கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன் மாடலுக்கு புளூடூத் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இணையதளத்தில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் விரைவில் கேலக்ஸி ஜே3(2018) சாதனம் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது வெளியிடப்பட்ட கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போனில் 5 விரல் சைகை ஆதரவு கொண்ட தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1280 x 720 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கருவி எக்ஸிநோஸ் 7870 குவாட்-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையா கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, புளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications