இந்தியா: சாம்சங் அறிமுகப்படுத்தும் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்.!
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 2600எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பபட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக கேலக்ஸி ஜெ2 கோர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதிகளை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது.
கேலக்ஸி ஜெ2 கோர் (ஆண்ட்ராய்டு கோ) ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற வசதிகள் இடம்பெறவில்லை,குறிப்பாக பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஜெ2 கோர்:
கேலக்ஸி ஜெ2 கோர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.0-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 540x960 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

எக்ஸிநோஸ் 7570:
இக்கருவி 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எக்ஸிநோஸ் 7570 14என்எம் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1
ஓரியோ இயங்குதளத்தைக் கொண்டுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:
கேலக்ஸி ஜெ2 கோர் ஸ்மார்ட்போன் பொதுவாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இதில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 2600எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பபட்டுள்ளது.

கேமரா:
கேலக்ஸி ஜெ2 கோர்; சாதனத்தில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, குறிப்பாக இந்தியாவில்
அதிகமாக கேலக்ஸி ஜெ2 கோர்ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








