Home
Mobile

ராக்கெட் வேகத்தில் இயங்கும் புதிய பிராசஸருடன் சாம்சங் மொபைல்!

By Super
ராக்கெட் வேகத்தில் இயங்கும் புதிய பிராசஸருடன் சாம்சங் மொபைல்!

வாடிக்கையாளர்களுக்கு பழகிய அதே தொழில் நுட்பங்களை எத்தனை நாள் தான் கொடுத்து கொண்டே இருப்பது. எனவே, சற்று வித்தியாசம் காட்ட வேண்டும் என்று சாம்சங் விரும்பியுள்ளது. இதை நிரூபனம் செய்யும் வகையில் ஒரு புதிய தொழில் நுட்பத்தை கொடுக்க முன் வந்து இருக்கிறது சாம்சங்.

புதிதாக அறிமுகப்படுத்த இருக்கும் சாம்சங்கின் கேலக்ஸி எஸ் III ஸ்மார்போனில் எக்ஸினோஸ் 4412 பிராசஸருடன் வழங்க இருக்கிறது. இந்த 32 என்எம் எக்ஸினோஸ் க்வேட் கோர் பிராசஸர் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ9 கோர்ஸ் மூலம் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும்.

இந்த பிராசஸர் இன்னும் பரிசோதனை நிலையில் தான் இருக்கிறது. சோதனைகள் முடிந்து வெளிவரும் பொழுது இந்த கேலக்ஸி எஸ் III ஸ்மார்ட் மொபைல் கம்பீர தோற்றம் கொண்டு உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கேலக்ஸி எஸ் III மொபைல் மாலி-டிஎஸ்04 கிராஃபிக்ஸ் பிராசஸர் கொண்டதாக இருக்கும். இதனுடைய விசேஷம் என்னவென்றால் ஏற்கனவே சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பொருத்தப்பட்டிருக்கும் மாலி கிராபிக்ஸ் பிராசஸரைவிட 5 மடங்கு கூடுதல் வேகம் கொண்டதாக இருக்கும்.

அடுத்த பிப்ரவரியில் பார்சிலோனாவில் நடக்கும் 2012 எம்டபிள்யூசி கண்காட்சியில், இந்த புதிய சாம்சங் ஸ்மாட்ர்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ் II மொபைல் மாடல்கள் எக்ஸினோஸ் 4210 1.2 ஜிகா ஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸர் கொண்டதாக இருக்கிறது. இதை விட அதிக தொழில் நுட்ப வசதிகளை சாம்சங் கேலக்ஸி III மொபைல் கொடுக்கும் என்று நம்பலாம்.

அதிக ஆற்றல் வாய்ந்த ஸ்மார்ட்போன்களை நாடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சாம்சங் கேலக்ஸி III மொபைலில் உள்ள அதி நவீன பிராசஸர் நிச்சயம் மிகுந்த ஆர்வத்தை அளிக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X