கேலக்ஸி கிராண்ட் விற்பனை அபாரம்...!

Written By:

இன்று மொபைல் உலகில் ஆப்பிளை காப்பி அடித்தாலும் தொடர்ந்து வெற்றிகள் பல குவித்து வரும் சாம்சங் கடந்த நவம்பரில் ஒரு ஸ்மார்ட் போனை வெளியிட்டது. அதுதான் சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2 ஆகும்.

ஏற்கனவே வெளியான கேலக்ஸி கிராண்ட் விற்பனையில் சக்கைபோடு போட்டது. அதே போல் இந்த மொபைலும் விற்பனையில் சக்கை போடு போடுகிறது மேலும், இந்த மொபைலில் ஆண்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸிஸ் இயங்கக்கூடியதாகும்.

இது 5.2 இன்ச் நீளம் கொண்டது இந்த மொபைல். பிராஸஸரை பொறுத்த வரை இதில் 1.2GHz quad-core processor பொறுத்தப்பட்டுள்ளது இது மற்ற பிராஸஸர்கலை விட மிகவும் வேகமாக இயங்கக்கூடியதாகும்.

மேலும் 8MPக்கு கேமராவும் 1.9MP க்கு பிரன்ட் கேமராவும் இதில் இருக்கிறது அதனால் இதன் கிளாரிட்டியும் ஓரளவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

கேலக்ஸி கிராண்ட் விற்பனை அபாரம்...!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இந்த மொபைல் 8GB க்கு இன்டர்நெல் மெமரியுடன் சேர்ந்தே வருகிறது இதன் இன்னொரு ஸ்பெஷல் இது டூயல் சிம் மொபைல் என்பதுதான்.

1.5GB க்கு ரேமும் இதில் உள்ளது மற்றும் Wi-Fi, Bluetooth, GPS/ AGPS என அனைத்தும் இதில் உள்ளது, இதன் பேட்டரி திறன் 2600mAh தான் இது சற்று குறைவான பேட்டரி திறன் தான் ஆனால் தற்போது வெளிவரும் பெருவாரியான மொபைல்களில் 2000mAh பேட்டரி தான் உள்ளது.

இந்த மொபைலின் எடை 163 கிராமாகும் இதோ இந்த மொபைலை ஆன்லைனிஸ் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot