அட்டகாச விலைக் குறைப்பு: சாம்சங் கேலக்ஸி ரசிகர்களா நீங்கள்? இதோ லீக்கான முக்கிய தகவல்.,

|

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும், இந்நிலையில் இந்த விலைகுறைப்பு சலுகை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.

 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

தற்சமயம் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மாரட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.17,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் ரூ.19,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.4-இன்ச் டிஸ்பிளே

6.4-இன்ச் டிஸ்பிளே

6.4-இன்ச் டிஸ்பிளே சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் முழு எச்டி இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2,340 x 1,080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0பை

ஆண்ட்ராய்டு 9.0பை

ஆண்ட்ராய்டு 9.0பை இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 10என்எம் எஸ்ஒசி சிப்செட் உடன் மாலி-ஜி17 ஆதரவும் இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வருமா., வராதா இல்ல வருவதற்கு ஏதாவது அறிகுறி இருக்கா., BSNL-ன் அந்த சேவைக்கான தேதி மீண்டும் மாற்றம்!வருமா., வராதா இல்ல வருவதற்கு ஏதாவது அறிகுறி இருக்கா., BSNL-ன் அந்த சேவைக்கான தேதி மீண்டும் மாற்றம்!

4ஜிபி/6ஜிபி ரேம்

4ஜிபி/6ஜிபி ரேம்

4ஜிபி/6ஜிபி ரேம் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

மூன்று கேமராக்கள் கேலக்ஸி

மூன்று கேமராக்கள் கேலக்ஸி

மூன்று கேமராக்கள் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் +5எம்பி டெப்த் சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி இந்த கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவும், 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

இணையத்தில் லீக்

இணையத்தில் லீக்

அதேபோல் புதிதாவ அறிமுகமாகவுள்ள சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. அந்த வகையில் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனின் ஃபிரேம் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஃபிரேம் புகைப்படத்தின் படி புதிய ஸ்மார்ட்போன் சிறிய பன்ச் ஹோல் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், குறைந்தபட்சம் 32 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்படலாம் மற்றும் சாம்சங்கின் புதிய ஒன் யு.ஐ. 2.0 வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Google-க்கே இந்த நிலையா., ஆனா இந்தியர்கள் ஹேப்பி அன்னாச்சி: என்ன தெரியுமா?Google-க்கே இந்த நிலையா., ஆனா இந்தியர்கள் ஹேப்பி அன்னாச்சி: என்ன தெரியுமா?

4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். முதல் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என கூறப்பட்டது.

மூன்று பிரைமரி கேமரா

மூன்று பிரைமரி கேமரா

இத்துடன் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

pic courtesy: 91mobiles

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung galaxy gets another price cut and upcoming galaxy frames leaked

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X