சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் வருங்கால கலாச்சாரத்தின் ஆரம்பம்!!

Written By:
    X

    தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வருகின்றன. எதிர்காலத்தில் உடம்பில் அணிந்து கொள்ளக்கூடிய கம்பியூட்டிங் சாதனங்களே அதிகம் பயன்பாட்டில் இருக்கும் என தெரிகிறது.

    1990களில் வந்த casio நிறுவனத்தின் கால்க்குலேட்டர் வாட்ச் கையில் அணிந்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு எலக்டிரானிக் சாதனம். அது மக்கிளிடத்தில் மிகவும் பிரபலமடைந்தது. அது போலதான் எதிர்காலத்திலும் உடம்பில் அணிந்துக்கொள்ளும்படியான சாதனங்கள் அதிகரிக்கும்.

    கூகுள் நிறுவனம் மூக்கு கண்ணாடி போன்ற தோற்றம் கொண்ட கூகுள் கிளாஸ் எனப்படும் ஒரு கம்பியூட்டிங் சாதனத்தை உருவாக்கியது. இதில் பல பயன்கள் உள்ளன, கூகுளின் இந்த படைப்பு வருங்காலத்துக்கு தேவையான ஒரு வெற்றி படைப்புதான்.

    அண்மையில் கூட சென்னையில் லைப்லைன் மருத்துவமனையின் தலைமை டாக்டர் கூகுள் கிளாஸை அணிந்துகொண்டு ஆப்ரேஷன் செய்தார். கூகுள் கிளாஸின் உதவியால் அந்த ஆப்ரேஷனை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் லைவாக வீடியோவில் பார்க்க முடிந்தது.

    கூகுள் கிளாஸ் முகத்தில் அணிந்துக்கொள்ளக்கூடிய ஒரு சாதாரன கண்ணாடி போல தான் இருக்கிறது. ஆனால் இதன் செயல்பாடு மற்றும் பயன்கள் ஏராளம். இந்த சாதனத்தின் வெற்றியை தொடர்ந்து தான் சாம்சங் மற்றும் சோனி போன்ற பல முன்னனி நிறுவனங்கள் உடம்பில் அணிந்துக்கொள்ளக்கூடிய கம்பியூட்டிங் சாதனங்களை உருவாக்க பணத்தை அதிகம் முதலீடு செய்கின்றனர்.

    இந்நிறுவனங்களின் இந்த முயற்ச்சியின் இப்பொழுது உருவாகி வரும் ஸ்மார்ட்வாட்ச் கலாச்சாரம். சோனி மற்றும் சாம்சங், இந்த இரண்டு நிறவனங்களுமே கையில் அணிந்துக்கொள்ளும் வகையில் ஸ்மார்ட்வாட்சுகளை உருவாக்கியுள்ளனர்.

    சாம்சங் நிறுவனம் மக்கிளிடத்தில் அதிகம் பிரபலமாக இருப்பதால் சோனியின் ஸ்மார்ட்வாட்சை விட அண்மையில் வெளிவந்த சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் விரைவில் பிரபலமாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வருங்கால கலாச்சாரகத்தின் ஒரு தொடக்கமாகவே கருதப்படுகிறது. இந்த புதிய படைப்பில் உள்ள நிறை, குறை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் ஜெர்மனியில் நடந்த IFA 2013 வர்த்தக கண்காட்சியில் முதலில் வெளியிடப்பட்டது.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    இந்தியாவில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி வெளிவந்தது இதனுடன் சாம்சங் கேல்கஸி நோட் 3யும் வெளிவந்தது.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ. 22,990 ஆகும் கிட்டதிட்ட சாம்சங் கேலக்ஸி மெகா 5.8 ஸ்மார்ட்போனுக்கு சமமான விலை ஆகும்.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் 6 வகையான வண்ணங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் சாம்சங் நிறவனம் தெரிவித்துள்ளது.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    இது 1.6இன்ஞ் சூப்பர் ஆமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் ரெசலூஸன் 320*320 பிக்சல்ஸ் ஆகும். லேட்டெஸ்டாக வெளிவந்த ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் இதில் உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    கிட்டதிட்ட 70 அப்பளிகேஷன்களை பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    இந்த ஸ்மார்ட்வாட்ச்சை நாம் ஸ்மார்ட்போன்களுடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    ஆனால் இதன் மிகப் பெரிய குறை என்னவென்றால் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் கொண்ட சாம்சங் சாதனங்களான கேலக்ஸி நோட் 3, கேலக்ஸி எஸ்4 , கேலக்ஸி நோட் 2 மற்றும் கேலக்ஸி நோட் 10.1 போன்றவைகளுடன் மட்டுமே இதை கனெக்ட் செய்ய முடியும்.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் டிஸைன் மிகவும் அழகாக சிம்பிளாக உள்ளது. இதன் பிரண்ட் பாடி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் ஸ்டிராப்பில் கேமரா மற்றும் மைக்கிரோபோன் உள்ளது. இதில் இருப்பது 1.9 மெகாபிக்சல் கேமரா ஆகும்.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச் கையில் அணிந்து கொள்வதற்க்கு மிகவும் வசதியாக உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    இந்த ஸ்மார்ட்வாட்ச் விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் ஏற்றது என்று சாம்சங் நிறுவனம் விளம்பரபடுத்தி வருகிறது.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    800MHZ எக்ஸனோஸ் சிபியூ, 512எம்பி ராம் மற்றும் 4ஜிபி ரோம் இதில் உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    ஒரு முறை சார்ஜ் செய்தால் இதன் பேட்டரி 25 மணி நேரம் வரை வரும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சாம்சங் கேலக்ஸி கியர் ஸ்மார்ட்வாட்ச்

    செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரீடெய்ல் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும்.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more