Samsung Galaxy Forever திட்டம்.. பாதி விலைக்கு Galaxy S26 Plus, S26 Ultra.. அதுவும் EMI-ல்.. எப்படி வாங்குவது?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் 'கேலக்ஸி ஃபாரெவர்' என்கிற புதிய திட்டத்தை (Samsung Galaxy Forever Programme) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமே - சாம்சங் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை முழு விலையையும் முன்கூட்டியே செலுத்தாமல் எளிதாக சொந்தமாக்கி கொள்வதே ஆகும்.
கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் "முதலில்" பாதி விலையை மட்டுமே செலுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போனை சொந்தமாக்கி கொள்ளலாம்; அதை வீட்டிற்கு எடுத்து செல்லலாம். அதெப்படி? இதோ விவரங்கள்:

கேலக்ஸி ஃபாரெவர் திட்டம் என்றால் என்ன? கேலக்ஸி ஃபாரெவர் திட்டத்தின் அடிப்படை கருத்து மிகவும் எளிமையானது. ஸ்மார்ட்போனின் விலையில் 50 சதவீதத்தை, வட்டியில்லா 12 மாத தவணைகளில் நீங்கள் செலுத்துவீர்கள். ஒரு வருடத்திற்கு பிறகு, நீங்கள் அந்த ஸ்மார்ட்போனைத் திருப்பி கொடுக்கலாம், அல்லது அதை நீங்களே வைத்துக்கொள்ளலாம் அல்லது அடுத்த கேலக்ஸி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்
சாம்சங் கேர் பிளஸ் (Samsung Care Plus) திட்டத்தின் கீழ், எந்த கேள்வியும் கேட்காத கொள்கையின் (No-questions-asked policy) மூலம் சாம்சங் இதை ஆதரிப்பதால், ஸ்மார்ட்போனை திருப்பக் கொடுப்பதில் சிக்கலான ஆவணப்பணிகள் (Complicated paperwork) எதுவும் இருக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தகக்து.
மாதாந்திர தவணை விவரங்கள்: ஒருவேளை நீங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வாங்கினால், இதற்காக நீங்கள் செலுத்த வேண்டிய மாத தவணை ரூ.5,833.29 ஆகும் மற்றும் இதனுடன் ரூ.749.92 என்கிற திட்ட கட்டணம் சேர்த்து, உங்கள் மாதாந்திர கட்டணம் ரூ. 6,583.21 ஆக இருக்கும். இதேபோல கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடலின் மாத தவணை ரூ.4,999.96 மற்றும் அதனுடன் அதே ரூ.749.92 திட்ட கட்டணமும் சேர்த்து, மொத்தமாக மாதத்திற்கு ரூ.5,749.88 ஆகும்.
இந்த திட்ட கட்டணமானது, 13 மாதங்களுக்கான சாம்சங் கேர் பிளஸ் சேவையை உள்ளடக்கியது. இதில், எந்தவித கழிவுகளும் இல்லாத ஆக்சிடென்டல் மற்றும் லிக்விட் டேமேஜ் பாதுகாப்பும் அடங்கும். இதன் மதிப்பு ரூ.13,999 ஆகும். இதற்கான கட்டண விருப்பங்களில் - கிரெடிட் கார்டு, சாம்சங்.காம் இல் நோ காஸ்ட் இஎம்ஐ, மற்றும் சாம்சங்.காம் ற்றும் சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் கிடைக்கும் சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் (Samsung Finance+) ஆகியவைகள் அடங்கும்.
12 மாதங்கள் முடிந்த பிறகு, கிரெடிட் கார்டு பயனர்கள், உறுதியான 50 சதவீத திரும்ப பெறுதலுக்காக ஸ்மார்ட்போனை திருப்பிக் கொடுக்கலாம் அல்லது மீதமுள்ள 50 சதவீதத்தை மேலும் 12 வட்டியில்லா இஎம்ஐ வழியாக செலுத்தலாம். சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் பயனர்கள், தங்களது ஸ்மார்ட்போனை திருப்பி கொடுத்து அடுத்த பிளாக்ஷிப் மாடலுக்கு அப்கிரேட் ஆகலாம் அல்லது 13-வது மாதத்தில் மீதமுள்ள 50 சதவீத தொகையை செலுத்தி தற்போதைய ஸ்மார்ட்போனை தாங்களே வைத்துக்கொள்ளலாம்.
கேலக்ஸி ஃபாரெவர் திட்டமானது சாம்சங்.காம் தளத்திலும், இந்தியா முழுவதும் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களிலும் அணுக கிடைக்கிறது. மேலும், சாம்சங் தனது கார்ப்பரேட் பிளஸ் மற்றும் ஸ்டூடண்ட் பிளஸ் ஆன்லைன் ஸ்டோர்கள் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பெருநிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
OPINION - சாம்சங்கின் இந்த கேலக்ஸி ஃபாரெவர் திட்டம் யாருக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கும்? விலை காரணமாக கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா அல்லது எஸ்26 பிளஸ் ஆகிய மாடல்களை வாங்குவதா வேண்டாமா என்று நீங்கள் யோசித்து கொண்டிருந்தால், கேலக்ஸி ஃபாரெவர் திட்டம் உங்களுக்கானது தான்.
இதன் கீழ் நீங்கள் உங்களுடைய பட்ஜெட்டை எளிதாக நிர்வகிக்கலாம். ரூபாய் 1 லட்சத்திற்கும் மேலாக முன்பணம் செலுத்துவதை விட, மாதத்திற்கு சுமார் ரூ.6,500 செலுத்துவது உண்மையிலேயே ஒரு நல்ல சாய்ஸ். மேலும், இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள சாம்சங் கேர் பிளஸ் காப்பீடு ஆனது, ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனில் நங்கள் கூடுதல் இடர்பாடுகளை ஏற்க வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது.
எல்லவற்றை விட முக்கியமான 12 மாதங்களின் முடிவில், இந்த திட்டத்தின் கீழ் உள்ள (திருப்பி கொடுக்கும்) நெகிழ்வுத்தன்மை ஆனது பலருக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் புதிய ஸ்மார்ட்போனுக்கு அப்கிரேட் ஆகி கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு; இது 200% அவர்களுக்கானது தான்!


Click it and Unblock the Notifications








