ரூ.17,000 விலைமதிப்பில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி போல்டர் 2 பிள்ப் போன்.!
சாம்சங் கேலக்ஸி போல்டர் பிள்ப் போன் : 2ஜிபி ரேம், 16ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் பல்வேறு மொபைல்மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, தற்போது சிறந்த தரம் கொண்ட சாம்சங் கேலக்ஸி போல்டர் பிள்ப் போன் என்ற மாடலை அறிமுகப்படுத்துகிறது.
இதன் விலை பொறுத்தமட்டில் சற்று அதிகமாக உள்ளது, இருந்தபோதிலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த மொபைல். இந்தியாவில் அதிமாக மக்கள் பயன்படுத்துவது சாம்சங் நிறுவனத்தின் மொபைல் மாடல்கள்.

டிஸ்பிளே:
இக்கருவி 3.8அங்குல அளவு டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் கீபேட் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேமரா:
சாம்சங் கேலக்ஸி போல்டர் 2 பிள்ப் போன் பின்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம்.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த பிள்ப் போன்உள்ளது.

சாப்ட்வேர்:
கேலக்ஸி போல்டர் பிள்ப் 2 போன் பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

பேட்டரி:
கேலக்ஸி போல்டர் 2 பிள்ப் போன் பொருத்தவரை 1950எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த பிள்ப் போன்.

விலை:
இதன் விலை பொறுத்தமட்டில் ரூபாய்.17,000க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications