சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 2 விரைவில் அறிமுகம். இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

|

2020 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் சாம்சங் பிஸியாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் சில மாதங்களில் பல புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை பல பட்ஜெட் பிரிவுகளில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த மாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாடல்களாக இருந்தாலும், குறிப்பாக எஸ் 11 சீரிஸ் மற்றும் கேலக்ஸி மடக்கும் வகையிலான மாடல்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

விரைவில் அறிமுகமாகவிருக்கும்

விரைவில் அறிமுகமாகவிருக்கும் எஸ் 11 பற்றி ஏற்கனவே அதிகம் செய்திகள் வெளிவந்தாலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் மடிப்பு வகை மாடல்தானா என்பது குறித்த தகவல் இன்னும் உறுதியாக தெரியாததால் மர்மமாக உள்ளது. இந்த மாடல் குறித்து பல வதந்திகள் இருந்தபோதிலும், கேலக்ஸி மாடல் மடிப்பு வகையா? என்பது இதுகுறித்த படங்கள் வெளிவந்தால் மட்டுமே உறுதி செய்யப்படும்.

ஆனால் இந்த மாடல் மடிப்பு வகையோ இல்லையோ, இதுகுறித்து நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.

கேலக்ஸி ஃபோல்ட் 2, எப்போது அறிமுகம் செய்யப்படும்?

கேலக்ஸி ஃபோல்ட் 2, எப்போது அறிமுகம் செய்யப்படும்?

சாம்சங் நிறுவனம் இதுவரை இந்த மாடலின் அறிமுக தேதி குறித்து எதையும் உறுதிப்படுத்தவில்லை. இதுகுறித்து எந்தவொரு தகவலையும் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் வழியாக இன்னும் எந்த தகவலும் இல்லை. இருப்பினும் பிப்ரவரி 2020 இல் கேலக்ஸி எஸ் 11 வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரிக்கு முன்பே கூட அறிமுகம் செய்யப்படலாம்

பிப்ரவரிக்கு முன்பே கூட அறிமுகம் செய்யப்படலாம்

பிப்ரவரிக்கு முன்பே கூட அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவல்களும் வந்துள்ளன, இருப்பினும், இது முன்னரே வெளியாக சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. இப்போதைக்கு, இந்த மாடல் பிப்ரவரியில் மட்டுமே வெளியிடப்படும் என்றும், பின்னர் ஆண்டின் பிற்பகுதிகளில் உலகெங்கிலும் உள்ள முக்கியமான சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தோன்றுகிறது.

கேலக்ஸி ஃபோல்ட் மாடல் ஒரு தனித்துவமான மாடல் என்றும் இதில் உள்ள 4.6 இஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் தொலைபேசியின் உள்ளே ஒரு முதன்மை 7.3 இன்ச் மடிக்கக்கூடிய பேனல் உள்ளது. இருப்பினும், கேலக்ஸி ஃபோல்ட் 2 மாடலில் நடுவில் இயங்கும் ஒரு சிறிய மடிப்பு இருக்கும் என்றும் இது ஸ்மார்ட்போனை பயன்படுத்த மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நவீன மடிப்பு வகை

முதல் நவீன மடிப்பு வகை

மேலும் பிளாஸ்டிக்கிற்கு பதிலாக "அல்ட்ரா வகையில் மெல்லிய கண்ணாடி அட்டையை" பேனலில் பயன்படுத்துவதன் மூலம் சாம்சங் நிறுவனம் எடுத்து புதிய முயற்சி நிச்சயம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். கேலக்ஸி ஃபோல்ட் 2 உலகின் முதல் நவீன மடிப்பு வகை ஸ்மார்ட்போனாக இருக்கும்.


இதுகுறித்து ஒரு அறிக்கையில் யுடிஜி (அல்ட்ரா-மெல்லிய கண்ணாடி) என்று அழைக்கப்பட்ட "அல்ட்ரா-மெல்லிய கண்ணாடி கவர்", மடிக்கக்கூடிய வகையில் தட்டையான தோற்றத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த கேலக்ஸி ஃபோல்ட் 2 இலிருந்து முற்றிலும் மாறுபட்ட சாதனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முக்கிய ஹார்ட்வேர்

முக்கிய ஹார்ட்வேர்

மேலும் மடிக்கக்கூடிய பேனலையும் கொண்டிருக்கும் சாம்சங் மாடலில் முக்கிய ஹார்ட்வேர் குறித்து அதிகம் தெரியவில்லை என்றாலும் கேலக்ஸி ஃபோல்ட் 2 மாடல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் முதன்மை அம்சங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கிறோம்.

கேலக்ஸி ஃபோல்ட் 2 மாடலில் 865 SoC ஐ அம்சமும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கூடுதல் ஸ்டோரேஜும் இதில் உண்டு. கேலக்ஸி ஃபோல்ட் 2 மற்ற வகையுடன் ஒப்பிடும்போது குறைவான லென்ஸ்கள் கொண்டு வரக்கூடும். மொத்தம் 6 கேமராக்களைக் கொண்டுவந்தாலும், கேலக்ஸி மடிப்பு 2 மூன்று லென்ஸ்கள் மட்டுமே பெற முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு டூயல் கேமிராவும் உண்டு.

ஹெட்ஜேக் மற்றும் டைப் சி போர்ட்

ஹெட்ஜேக் மற்றும் டைப் சி போர்ட்

மேலும் கேலக்ஸி ஃபோல்ட் 2 ஹெட்ஜேக் மற்றும் டைப் சி போர்ட் ஆகியவையும் உண்டு. இதில் உள்ள ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மறும் ஒன்யுஐ 2 ஆபரேட்டிங் சிஸ்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விலை

இதன் விலை

கேலக்ஸி போல்ட் 2 வகை மாடல் நிச்சயம் மலிவு விலையில் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த மாடல் குறைஅந்தபட்சம் $1500 முதல் $ 2000 அளவில் இதன் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Fold 2 is coming soon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X