4.7இன்ச் உடன் வெளிவரும் அட்டகசமான கேலக்ஸி ஃபீல்.!
புதிய சாம்சங் கேலக்ஸி ஃபீல் : 4.7 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!
சாம்சங் மொபைல் பொருத்தமாட்டில் இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் உபயோகம் செய்கிறார்கள் மேலும் கேலக்ஸி எஸ்8 விற்ப்பனையில் அதிக லாபாம் பெற்றது அந்நிறுவனம். மேலும் கேலக்ஸி எஸ்8 வெளியீட்டு பிறகு தற்போது ஒரு சாதாரண பட்ஜெட் கொண்ட சாம்சங் கேலக்ஸி ஃபீல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் விற்ப்பனைப் பொருத்தமாட்டில் ஜூன் மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவை பல தொழில்நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஃபீல்:
சாம்சங் கேலக்ஸி ஃபீல் பொருத்தவரை ஒரு சிறந்த பட்ஜெட் போன், தற்போது இவற்றை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும், மேலும் ஜூன் மாதத்தில் இதன் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 4.7 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.

கேமரா:
சாம்சங் கேலக்ஸி ஃபீல் பொருத்தவரை ரியர் கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 3 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ இதன் இயக்கம் பொருத்தவரை மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சாப்ட்வேர்:
சாம்சங் கேலக்ஸி ஃபீல் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது.1.6 ஜிஎச்இசெட் அக்டா கோர், ஆண்ட்ராய்டு7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை 4ஜி வோல்ட், வைஃபை802.11, ப்ளுடூத் 4.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :
இதன் பேட்டரி பொருத்தவரை 3000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். மேலும் கேலக்ஸி ஃபீல் வெள்ளை, இளஞ்சிவப்பு, மற்றும் கருப்பு நிற வகைகளில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications