Home
Mobile

ஒத்த போனுக்கு மொத்த ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்போது, 6000mAh பேட்டரியுடன் புதிய பட்ஜெட் மாடலாக சாம்சங் கேலக்ஸி எ70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. வீகன் லெதர் பேனல் கொண்ட மாடலாக இருப்பதால், கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எ70இ 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

டூயல் ரியர் கேமரா சிஸ்டம், வீகன் லெதர் பேனல், வாட்டர் டிராப் நாட்ச் செல்பீ ஷூட்டர் மற்றும் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டிலும் டிசைனில் பட்டையை கிளப்பி இருக்கிறது. மேலும், ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்டிலும் மற்ற நிறுவனங்களை தூக்கி சாப்பிடுள்ளது.

ஒத்த போனுக்கு மொத்த ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி!

ஏனென்றால், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுத்தது மட்டுமல்லாமல், 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்களை இந்த சாம்சங் கேலக்ஸி எ70இ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஒன் யுஐ 8.0 (One UI 8.0) கொடுக்கப்பட்டு உள்ளது. சாம்சங் க்நாக்ஸ் வால்ட் (Samsung Knox Vault) உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எ70இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70e 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்துள்ளது. 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எ70இ 5ஜி மாடல் கொண்டுள்ளது.

எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120 Hz ரெஃப்ரெட் ரேட் கொடுத்துள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க உள்ளன. 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD) பயன்படுத்தி கொள்ளலாம். டூயல் சிம் சிலாட் + மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைத்துள்ளது.

ஒத்த போனுக்கு மொத்த ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி!

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) இந்த சாம்சங் கேலக்ஸி எ70இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. 8.2 எம்எம் தடிமன் மற்றும் 199 கிராம் எடை கொண்டுள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கிடைத்துள்ளது. 12 பேண்ட்கள் சப்போர்ட் கொண்ட 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.3 மற்றும் வை-பை 802.11 ஏசி ஆகிய கனெக்டிவிட்டிகளையும் கொடுத்துள்ளது.

ஸ்பாட்லைட் ப்ளூ (Spotlight Blue), லைம்லைட் கிரீன் (Limelight Green) கலர்களில் வாங்கி கொள்ளலாம். 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும் இருக்கிறது. ரூ.1,000 தள்ளுபடி போக ரூ.11,999 ஆக இருக்கிறது. பிப்ரவரி 17ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட் தளத்தில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F70e 5G With 6000mAh Battery Launched in India Under Rs 13000 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X