Home
Mobile

பிப்.9 க்கு அப்புறம் இதுதான்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 6 ஓஎஸ் அப்டேட்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், டிஸ்பிளே, சிப்செட், ஓஎஸ், கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதியன்று இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாக இருப்பதால் சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்களிடமும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் எப்படி இருக்கிறது?

பிப்.9 க்கு அப்புறம் இதுதான்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70e 5G Specifications): 6.7 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைத்து உள்ளது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது.

இந்த சிப்செட் 623K அன்டுடு ஸ்கோர் கொண்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன்யுஐ 8 (OneUI 8) கொடுக்கப்பட்டு உள்ளது. சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு வழக்கமாக கிடைக்கும் ஓஎஸ் அப்டேட் பாலிசி இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கும் கிடைக்கிறது. ஆகவே, 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும்.

மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கும். 12 5ஜி பேண்ட்களின் சப்போர்ட் கிடைக்கிறது. கிநாக்ஸ் வாலெட் (Knox Vault), வாய்ஸ் போகஸ் (Voice Focus) மற்றும் குயிக் ஷேர் (Quick Share) போன்ற பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுக்கப்பட்டு இருக்கிறது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 6000mAh பேட்டரி கொண்ட மாடலாக வெளியாக உள்ளது. 2 கலர்களில் கிடைக்க உள்ளது.

ஆகவே, லைம் கிரீன் (Lime Green) மற்றும் ஸ்பாட்லைட் ப்ளூ (Spotlight Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர உள்ளது. வீகன் லெதர் பேனல் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கப்பட உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு உள்ளன.

பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாக இருப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. சாம்சங் கேலக்ஸி எப் சீரிஸ் (Samsung Galaxy F Series) மாடல்கள் இந்தியாவில் தனியிடம் பிடித்துள்ளன. அதிக பேட்டரி மற்றும் பக்கா கேமராவுடன் கிடைப்பதால், அடுத்தடுத்த மாடல்களுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F70e 5G With 50MP Camera 6000mAh Battery Launching in India on February 9 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X