1 இல்ல.. ஆளுக்கு 2 ஆர்டர்.. ரூ.13,000 பட்ஜெட்ல Samsung 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 4GB ரேம்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் எப் சீரிஸ் மாடல்கள் பட்ஜெட் விலைக்கு கிடைப்பதால், நல்ல வரவேற்பை பெறுகின்றன. இதில் மலிவான விலைக்கு வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) ஸ்மார்ட்போன் இப்போது, தள்ளுபடி விலையில் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விவரங்கள் மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் விற்பனையில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,499ஆக இருக்கிறது. இந்த விலையானது 24 சதவீத தள்ளுபடி போக கிடைக்கிறது. கூடுதலாக தகுதி வாய்ந்த கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.725 தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.13,774 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் எதிர்பார்க்கப்படும் பட்ஜெட்டில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இது முந்தைய மாடலைவிட 20 சதவீதம் அதிக கேபாசிட்டி கொண்டதாக இருக்கிறது. 12 பேண்ட்களின் சப்போர்ட் கொண்ட 5ஜி கனெக்டிவிட்டி கிடைக்கிறது. 6 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்கள், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன.
இதுவும் பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத அப்கிரேட்களாக இருக்கின்றன. சாம்சங் க்நாக்ஸ் வால்ட் (Samsung Knox Vault), ஆட்டோ பிளாக்கர் (Auto Blocker) போன்ற பிரத்யேக பீச்சர்களையும் கொடுக்கிறது. வீகன் லெதர் பேனலை விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ப ஸ்பாட்லைட் ப்ளூ (Spotlight Blue) மற்றும் லைம்லைட் கிரீன் (Spotlight Blue) கலர்களில் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70e 5G Specifications): 6 வருட ஓஎஸ் அப்டேட் மட்டுமல்லாமல், லேட்டஸ்ட் பீச்சர்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுத்து இருக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது.
ஒன் யுஐ 8.0 (One UI 8.0) இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி மாடலில் கிடைக்கிறது.
எப்/1.8 அபெர்சருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. எப்/2.4 அபெர்சருடன் 2 எம்பி டெப்த் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டூயல் ரியர் கேமரா செட்டப்பில் ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 10எக்ஸ் ஜூம் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. எப்/2.0 அபெர்சருடன் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications