ஆரம்பமே அட்டகாசமான ஆஃபர்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. விற்பனைக்கு வந்தது புது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) ஸ்மார்ட்போனை தற்போது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இப்போது சாம்சங்.காம்,பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த போனை வாங்க முடியும். இப்போது இந்த புதிய போனின் விலை, சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.15,499-ஆக உள்ளது. ஆனால் இந்த போனுக்கு அறிமுகம் சலுையாக ரூ.2000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் 4ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.11,999 விலையிலும், 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ.13,499 விலையிலும் வாங்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி எ70இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70e 5G Specifications): 6.7 எச்டி பிளஸ் இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எ70இ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்கள், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 Hz ரெஃப்ரெட் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எ70இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா +2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எ70இ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
6000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எ70இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker), 5ஜி, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.3, வை-பை 802.11 ஏசி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கும். இந்த போனின் எடை 199 கிராம் ஆகும். ஸ்பாட்லைட் ப்ளூ (Spotlight Blue), லைம்லைட் கிரீன் (Limelight Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








