Home
Mobile

Samsung செஞ்சிட்டான்.. ரூ.10000 பட்ஜெட்ல 5ஜி, 6000mAh பேட்டரி, IP54 ரேட்டிங்.. பட்டைய கிளப்பும் புது போன்!

சாம்சங் (Samsung) நிறுவனம் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி அன்று "சூப்பர் பட்ஜெட்" விலைப்பிரிவின் கீழ் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அது சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) மாடல் ஆகும். இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்கிற விவரங்கள் இதோ:

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,000 முதல் ரூ.15,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் இது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக - இது Limelight Green மற்றும் Spotlight Blue ஆகிய கலர் ஆப்ஷன்களில் விற்கப்படும்.

Samsung செஞ்சிட்டான்.. ரூ.10000 பட்ஜெட்ல 5ஜி, 6000mAh பேட்டரி, IP54!

சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிசைனை பொறுத்தவரை இது வீகன் லெதர் பேக் பேனல் மற்றும் பிளாட் ஆன பக்கங்களை கொண்டுள்ளது. இது ஒரு டேப்லெட் வடிவ ஹவுசிங்கில் செங்குத்தாக சீரமைக்கப்பட்ட டூயல் ரியர் கேமரா மாட்யூலை கொண்டுள்ளது. கேமரா செட்டப்பில் ஒரு LED ஃபிளாஷும் வைக்கப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் ஸ்லிம் ஆன பெசல்களுடன் கூடிய பெரிய டிஸ்பிளே மற்றும் செல்பீ கேமராவிற்கான வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் உள்ளது. வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் சற்று உயர்த்தப்பட்ட கீ ஐலேண்டில் வைக்கப்பட்டுள்ளன. இடது விளிம்பில் சிம் ட்ரே உள்ளது.

மிகவும் முக்கியமாக கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது IP54 ரேட்டிங் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு கட்டமைப்பை கொண்டிருக்கும் என்பதை சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டிமென்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் மூலம் இயக்கப்படும். இது 8GB வரை RAM மற்றும் 128GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது Android 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட One UI 8 இல் இயங்கும்.

சாம்சங் நிறுவனம் ஆறு ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் ஆறு ஆண்டு செக்யூரிட்டி அப்டேட்களுக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளதால், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 22 வரை ஆதரவை பெறும். இது Knox Vault மற்றும் Quick Share போன்ற அம்சங்களையும் ஆதரிக்கும். கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்

அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் இருக்கும். முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் இடம்பெறும். கடைசியாக சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6,000mAh பேட்டரி உடன் அறிமுகமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 25W வரை சார்ஜ் செய்யும் ஸ்பீடை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ்26 சீரீஸ் அறிமுகம்: சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்26 (Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்களை இந்த (பிப்ரவரி) மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறியிட்டு சில வேண்டும் என்றால் இது பிப்ரவரி 25 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்சி எஸ்26 சீரிஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26, கேலக்ஸி எஸ்26 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F70e 5G Display Chipset Camera Battery Round Up Ahead India Launch on Feb 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X