Home
Mobile

வீட்டுக்கு 2 ஆர்டர்.. மட்ட ரேட்ல Samsung 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

மட்ட ரேட்ல கிடைச்சா வீட்டுக்கு 2 ஆர்டர் போடாமலா இருப்பாங்க.. என்று சொல்லும்படியான தள்ளுபடி விலைக்கு சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. வீகன் லெதர் பேனலுடன் 6000mAh பேட்டரி கொண்ட மாடலாக இருப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

பிராண்ட் என்னும் பெயரை எப்போதே சாம்சங் பெற்றிவிட்டதால், அந்த ஸ்மார்ட்போன்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இதில் பட்ஜெட்டில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 32 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.12,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், ரூ.650 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது.

வீட்டுக்கு 2 ஆர்டர்.. மட்ட ரேட்ல Samsung 5ஜி போன்.. 6000mAh பேட்டரி!

இதை தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் வழியாக பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.12,349 விலையில் சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம். மேலும், ஈஎம்ஐ சலுகை, எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. ஸ்பாட்லைட் ப்ளூ (Spotlight Blue) மற்றும் லைம்லைட் கிரீன் (Spotlight Blue) கலர்களில் வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70e 5G Specifications): இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இருப்பினும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் பேக் செய்யப்பட்டு உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

16 மில்லியன் கலர் டெப்த் கொடுத்து இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 12 பேண்ட்களின் சப்போர்ட் இந்த சிப்செட்டில் கிடைக்கிறது.

ஆகவே, 5ஜி கனெக்டிவிட்டியானது இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி மாடலில் பக்காவாக இருக்கும். ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. இந்த மலிவான விலையில் கிடைத்தாலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் போக 6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கொடுக்கப்படும். அதேபோல 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கும்.

மேலும், சாம்சங் க்நாக்ஸ் வால்ட் (Samsung Knox Vault), ஆட்டோ பிளாக்கர் (Auto Blocker) பீச்சர்களுடன் ஒன் யுஐ 8 (One UI 8) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு எப்/1.8 அபெர்சர் மற்றும் டெப்த் கேமராவுக்கு எப்/2.4 அபெர்சர் கிடைக்கிறது. ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.

மெயின் கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்கும். 10எக்ஸ் ஜூமிங் செய்து கொள்ள முடியும். செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக எப்/2.0 அபெர்சர் கொண்ட 8 எம்பி கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொண்ட மாடலாக இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் இருக்கிறது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மட்டுமே கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) பேக் செய்யப்பட்டுள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கொடுத்து உள்ளது. 8.2 எம்எம் தடிமன் மற்றும 199 கிராம் எடை கொண்ட மாடலாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F70e 5G Available At 32 Percent Discount in Flipkart Check Super Deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X