வீட்டுக்கு 2 ஆர்டர்.. ரூ.14,724 க்கு வந்த Samsung 5G போன்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் சிறப்பு விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ரூ.15,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 6000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 18 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,499 விலைக்கு வாங்கலாம். மேலும், தகுதி வாய்ந்த பேங்க் கார்டுகளுக்கு ரூ.775 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,724 விலையில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு செய்யப்பட்டு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70e 5G Specifications): 16 மில்லியன் கலர் டெப்த் கொண்ட 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த ரவுண்டெட் கார்னர் டிஸ்பிளே மாடலில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.
மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் (Android OS Updates) கொடுக்கப்பட்டு உள்ளன.
6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கின்றன. ஒன் யுஐ 8.0 (One UI 8.0) மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 8.2 எம்எம் தடிமனுடன் 6000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. வீகன் லெதர் பேனலுடன் 199 கிராம் எடை வருகிறது.
இந்த பேட்டரிக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. இதில் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்காது. இருப்பினும், ஆட்டோ போகஸ் (Auto Focus) கொடுத்து இருக்கிறது.
மேலும், 10x ஜூமிங் கொண்ட கேமராவாக இருக்கிறது. ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்ட மாடலாக இருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளது.
1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) பயன்படுத்த சிலாட் மற்றும் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. லைம்லைட் கிரீன் (Limelight Green), ஸ்பாட்லைட் ப்ளூ (Spotlight Blue) ஆகிய கலர்கள் உள்ளன.
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), வை-பை 801.11 (Wi-Fi 802.11) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டிகள் உள்ளன. மேலும், ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டிகளை கொடுத்து உள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலும் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. ரூ.17,499 விலையில் இருந்து 17 சதவீத தள்ளுபடி போக கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications