மிரள விட்டாப்ல.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. புது Samsung போன்.. எந்த மாடல்?
இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ப சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி (Samsung Galaxy M47 5G) ஸ்மார்ட்போன் களமிறங்கி நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, சூட்டோடு சூடாக அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை களமிறக்க சாம்சங் நிறுவனம் ரெடியாகிவிட்டது. இது எப் சீரிஸ் மாடலாக இருக்கப் போகிறது.
சாம்சங் நிறுவனத்தின் எம் சீரிஸ் மற்றும் எப் சீரிஸ் மாடல்கள் வழக்கமாக அடுத்தடுத்து வெளியாகும். முன்னதாக சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியது. இப்போது, சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ (Samsung Galaxy F70 Pro) வெளியீட்டுக்கு ரெடியாகி வருகிறது. ப்ளூடூத் எஸ்ஐஜி (Bluetooth SIG) சர்டிபிகேஷனுக்கு வந்துள்ளது.

இதில் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்கள் தெரியவந்துள்ளன. அதே நேரத்தில் பட்ஜெட் விவரங்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த பட்ஜெட் சாம்சங் பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டுவிட்டது. பீச்சர்களை பார்த்துவிடலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ அம்சங்கள் (Samsung Galaxy F70 Pro Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core Snapdragon 6 Gen 3) சிப்செட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கிறது. 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. எப் சீரிஸ் மாடல்களில் வழக்கமாக கொடுக்கப்படும், 50 எம்பி கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த கேமராவுடன் அல்ட்ரா வைடு மற்றும் மேக்ரோ கேமரா கிடைக்க இருக்கிறது.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8.5 (One UI 8.5) கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக வெளியாகிய கேலக்ஸி எப் சீரிஸ் மாடல்களில் கிடைத்ததை போலவே 6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் (Android OS Update) கிடைக்க இருக்கிறது.
மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்க இருக்கின்றன. லெதர்-லைக் பினிஷிங் கொண்ட பேக் பேனலுடன் கலர் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ஓரிரு மாதங்களில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ரூ.25,000 பட்ஜெட்டில் கிடைக்கும் மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கப்போகிறது.
சமீபத்தில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 3 4nm) மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சனுடன் 6.7 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 6000mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இந்த மாடலும் ரூ.25,000 பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications