பிளிப்கார்ட் பிச்சிக்கும்.. 6000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. OIS கேமரா.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் எப் சீரிஸ் மாடலான சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி (Samsung Galaxy F70 Pro 5G) இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா மற்றும் IP64 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் இதோ.
ரூ.25,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் இந்த கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி வெளியாகி இருக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா டிசைன் மற்றும் பிரீமியம் லுக் கொடுக்கும்படியான கலர்களில் வந்துள்ளது. டூயல் டோன் கிடையாது. மெட்டாலிக் ஃபினிஷிங் மிடில் ஃபிரேம் கிடைக்கிறது. ஸ்லிம் பெசல்கள் மற்றும் பாடி கிடைப்பதால், லைட் வெயிட் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70 Pro 5G Specifications): 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் எச்டிஆர் செல்பீ கொடுக்கிறது. ஆப்ஜெக்ட் எரைசர், மை ஃபில்டர்ஸ் மற்றும் ஏஐ எடிட் உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core Snapdragon 6 Gen 3) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8.5 (One UI 8.5) கிடைக்கிறது. 6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. ஏஐ வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்ட ஏஐ பீச்சர்களை இந்த ஒன் யுஐ 8.5 கொடுக்கிறது.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலுஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. 24+ மணி நேரங்களுக்கு யூடியூப் பிளேபேக் கொடுக்கும். IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி இருக்கிறது. ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆல்பா பிளாக் (Alpha Black), ஆரா கிரீன் (Aura Green) ஆகிய கலர்களில் வாங்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி விலை (Samsung Galaxy F70 Pro 5G Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.23,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.27,999 ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999 ஆகவும் இருக்கிறது.பேங்க் ஆஃபர்கள் உள்பட அறிமுக சலுகையில் ரூ.23,999 விலைக்கு கிடைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications