இதுக்குத்தான் மொத்த மார்கெட் வெயிட்டிங்.. டிரிபிள் ரியர் கேமரா.. புது Samsung ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் எப் சீரிஸ் மாடல்களில் புதிய வரவாக சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி (Samsung Galaxy F70 Pro 5G) ஸ்மார்ட்போன் களமிறங்க இருக்கிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. ரியர் கேமரா டிசைன் மற்றும் கலர் விவரங்களும் போஸ்டர் வழியாக உறுதியாகி இருக்கின்றன.
சாம்சங் நிறுவனத்தின் எப் சீரிஸ் மாடல்கள் ரூ.15,000 பட்ஜெட்டில் வெளியாகி வருவதால், கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக இந்த சீரிஸில் சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி (Samsung Galaxy F70e 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருந்தது. ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வீகன் லெதர் பேனல், 50 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி கொடுத்து இருந்தது.

ஆனால், டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மட்டுமே கிடைத்தது. இதனால், கேமரா பிரியர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. இப்போது, சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனாது, டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்ட மாடலாக களமிறங்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது.
இதில் கிரீன் கலர் பேக் பேனல் மற்றும் வெர்டிகல் லைனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருப்பது போஸ்டர் வழியாக உறுதியாகி இருக்கிறது. இந்த விவரங்களை தவிர வேறு விவரங்கள் உறுதியாகவில்லை. அதே நேரத்தில், முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனின் டிசைனை இதில் பார்க்க முடிகிறது. கலர் மட்டும் மாறுபடுகிறது.
இதில் ப்ளூ மற்றும் ரெட் ஆகிய கலர்கள் கிடைத்தது. ஆனால், சாம்சங் கேலக்ஸி எப்70இ 5ஜி ஸ்மார்ட்போனில் கிரீன் கலர் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இந்த ஒரே கலரில் வெளியாகாது. மற்ற கலர் மற்றும் பீச்சர்கள் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. இருப்பினும், முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இதை தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ அம்சங்கள் (Samsung Galaxy F70 Pro Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core Snapdragon 6 Gen 3) சிப்செட் கிடைக்க உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 8.5 (One UI 8.5) கொடுக்கப்பட இருக்கின்றன. எப் சீரிஸ் மாடல்களுக்கு வழக்கமாக கிடைக்கும், 6 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்படுகிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது.
50 எம்பி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (Optical Image Stabilisation) கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வருகிறது. இந்த பீச்சர்கள் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி மாடலில் கிடைத்ததை போலவே இருக்கிறது. ஆகவே, ரூ.20,000 முதல் ரூ.25,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications