பொளந்து கட்டியாச்சு.. ரூ.26,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 6 ஜென் OS அப்டேட்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் பிரியர்களுக்கு அடுத்த வாரம் படு குஷியாக இருக்கப் போகிறது. சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி (Samsung Galaxy F70 Pro 5G) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி மட்டுமல்லாமல், விலை விவரங்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டன. முக்கிய பீச்சர்களும் தெரிய வந்துள்ளன. இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இப்போது, வெளியீட்டு தேதியுடன் ரேம், மெமரி மட்டுமல்லாமல், சிப்செட், பேட்டரி உள்ளிட்ட பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன.

கூடவே, விலை விவரங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.25,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.29,999 ஆகவும் இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999 ஆகவும் இருக்கிறது.
இது ஒரிஜினல் விலையாக இருக்கிறது. அறிமுக சலுகை மற்றும் பேங்க் ஆஃபர்களுடன் மேலும் கம்மியான விலைக்கு கிடைக்கும் என்பதையும் சாம்சங் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999 ஆக இருக்க வாய்ப்புள்ளது. இந்த விலை கிட்டத்தட்ட சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி மாடலை போலவே இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70 Pro 5G Specifications): சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி ஸ்மார்ட்போனில் கிரீன் மற்றும் பிளாக் கலர் வேரியண்ட்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியான டிசைன் மற்றும் கலரில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி கிடைக்க இருக்கிறது. 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது.
மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலுஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கிடைக்கிறது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது.
வழக்கமான ஒன் யுஐ (One UI) பேஸ்டு ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட உள்ளது. அதேபோல 6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜியை கொடுக்க இருக்கிறது.
இதுபோக அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் மேக்ரோ சென்சார் கொடுக்கப்பட உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000mAh பேட்டரியை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டன. விலை விவங்களும் தெரியவந்துள்ளன. ஆகவே, ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது.


Click it and Unblock the Notifications