Home
Mobile

யாரு விடுவா சொல்லுங்க.. 6 ஓஎஸ் அப்டேட்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி (Samsung Galaxy F70 Pro 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது. அதாவது அக்டோபர்-9- தேதி பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart's Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் தான் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி போன் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.

அதாவது 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற உள்ள சிறப்பு விற்பனையில் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் ரூ.25,999 விலையில் வாங்க கிடைக்கும். இதுதவிர பல சிறப்பான சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்படும்.

யாரு விடுவா சொல்லுங்க.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70 Pro 5G Specifications): ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa-Core Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியானது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இதில் உள்ளது.

6.7 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1400 நிட்ஸ் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் புரொடெக்சன், 1080×2340 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8.5 (One UI 8.5) மூலம் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி மாடல் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 6 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும். இதுதவிர 6 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதேபோல் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

யாரு விடுவா சொல்லுங்க.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

6ஜிபி ரேம் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய சாம்சங் போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, குளோனாஸ் (GLONASS), என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F70 Pro 5G Available at Rs 25999 During Flipkart Big Billion Days Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X