Home
Mobile

அவசரப்பட்டு வேற போன் வாங்காதீங்க.. அக்.18-க்கு அப்புறம் பட்ஜெட்ல Samsung 5G ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலாக சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி (Samsung Galaxy F70 5G) வெளியாக இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா, 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட், 5000mAh பேட்டரி உள்ளிட்ட பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் சாம்சங் நிறுவனத்தின் எப் சீரிஸ் மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதில் சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி புதிதாக சேர்ந்துள்ளது. வருகிற அக்டோபர் 18ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பட்ஜெட் விவரங்களும் தெரியவந்துள்ளன. முதலில் பீச்சர்களை பார்க்கலாம்.

அவசரப்பட்டு வேற போன் வாங்காதீங்க.. அக்.18-க்கு அப்புறம் பட்ஜெட்ல!

சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70 5G Specifications): கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்ட சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது.

மேலும், வழக்கமாக கிடைக்கும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட உள்ளது. எப் சீரிஸ் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும், டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுபோக 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 13 எம்பி கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இன்-ஹைவுஸ் சிப்செட் கொடுக்கப்பட உள்ளது. ஆகவே, ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 (Octa Core Exynos 1330) சிப்செட் கொடுக்கப்பட இருக்கிறது.

மேலும், 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேட்கள் (Android OS Upgrades) மற்றும் 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. ஒன் யுஐ கிடைக்கிறது. ஆகவே, சாம்சங் க்நாக்ஸ் (Samsung Knox), சாம்சங் வாலெட் (Samsung Wallet) உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்பட உள்ளன. குயிக் ஷேர், சர்க்கிள் டு சர்ச் உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்க இருக்கின்றன.

இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட உள்ளது. இந்த பேட்டரிக்கு 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் சப்போப்ட் கொடுக்கப்பட இருக்கிறது. லைலாக் பிளிஸ் (Lilac Bliss) மற்றும் பிலிஸ் பிளாக் (Bliss Black) கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த பீச்சர்களுக்கு ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருக்கிறது. ரூ.19,999 பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. அறிமுக சலுகை மற்றும் பேசிக் வேரியண்ட்டின் விலை மேலும் மலிவாக இருக்க வாய்ப்புள்ளது. வருகிற அக்டோபர் 18ஆம் தேதியில் விலை, பீச்சர்கள் தெரியவரும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F70 5G With 50MP Camera To Launch in India on October 18 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X