Home
Mobile

அறிமுகமானது புதிய சாம்சங் 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?

சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி (Samsung Galaxy F70 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம். அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த புதிய சாம்சங் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70 5G specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED (FHD+ Super AMOLED) வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus), 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புதிய சாம்சங் 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

எக்ஸிநோஸ் 1330 சிப்செட் (Exynos 1330 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த புதிய சாம்சங் போனுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன.

குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி உடன் புதிய சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

அறிமுகமானது புதிய சாம்சங் 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

அதேபோல் சர்க்கிள் டு சர்ச், கூகுள் ஜெமினி, டேப் அண்ட் பே போன்ற அனைத்து அம்சங்களும் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன. மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. விவிட் வயலட் மற்றும் போல்ட் பிளாக் ஆகிய கலர்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.22,999 விலையில் வாங்க கிடைக்கும். வரும் அக்டோபர் 20-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் இணையதளம் மூலம் இந்த போனை வாங்கலாம். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன.

photo credit: gadgets.beebom

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F70 5G with 5000mAh battery launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X