நாளை இந்தியாவில் களமிறங்கும் புதிய சாம்சங் 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி (Samsung Galaxy F70 5G) ஸ்மார்ட்போனை நாளை (அக்டோபர் 18) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போன் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி அம்சங்கள்: ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED (FHD+ Super AMOLED) வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate)மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1330 சிப்செட் (Exynos 1330 chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன.
இந்த புதிய சாம்சங் போனுக்கு 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 5 வருடங்களுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியும் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன.
5000எம்ஏஎச் பேட்டரி உடன் புதிய சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

சர்க்கிள் டு சர்ச், கூகுள் ஜெமினி, டேப் அண்ட் பே போன்ற அனைத்து அம்சங்களும் இந்த புதிய சாம்சங் போனில் உள்ளன. மேலும் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. விவிட் வயலட் மற்றும் போல்ட் பிளாக் ஆகிய கலர்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.
ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ19,999 விலையில் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications
