Samsung Galaxy F62 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.. என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
சாம்சங் நிறுவனம் வரும் பிப்ரவரி 15ம் தேதி சாம்சங் கேலக்ஸி எஃப் 62 (Samsung Galaxy F62) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன் 7000 எம்ஏஎச் பேட்டரி உடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விபரங்களைப் பார்க்கலாம்.

Samsung Galaxy F62 ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனம் பிளிப்கார்ட்டில் அதன் Samsung Galaxy F62 போனின் விளம்பர பக்கத்தை லைவ் செய்துள்ளது. பிப்ரவரி 15ம் தேதி திங்கள்கிழமை மதியம் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகத்திற்கு வெளிப்படுத்தப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 என்ற இடைப்பட்ட விலை பட்டியலில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7,000 எம்ஏஎச் பேட்டரியா?
கடந்த ஆண்டு அக்டோபரில் சாம்சங் கேலக்ஸி எஃப் 41 உடன் தொடங்கிய ஒப்பீட்டளவில் புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் தொடரின் இரண்டாவது ஸ்மார்ட்போன் மாடலாக இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 62 வெளிவருகிறது. இது பின்புறத்தில் நான்கு கேமரா அமைப்பை கொண்டு, ஒரு பஞ்ச் ஹோல் கட்அவுட் டிஸ்பிளே செல்ஃபி கேமராவை கொண்டுவருகிறது. இது 7,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 7nm எக்ஸினோஸ் 9825 சிப்செட் உடன் வெளி வருகிறது.

சில கசிவுகள்
இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய முக்கிய சிறப்பம்சங்கள் மட்டுமே இப்போது வெளியாகியுள்ள நிலையில், இன்னும் இந்த ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றிய சரியாய் விபரங்கள் மற்றும் இந்த விலை வரம்பின் கீழ் தான் வருமா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த காலத்தில் Samsung Galaxy F62 உடன் தொடர்புடைய சில கசிவுகள் நம்மிடம் உள்ளது. அது என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

ஸ்டோரேஜ் மற்றும் OS விபரம்
வெளியான முந்தைய கசிவுகள் படி, சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் 6.7' இன்ச் சூப்பர் அமோலேட் டிஸ்பிளே உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளில் ஒன்ருடன் வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 உடன் வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ப்ளூ மற்றும் கிரீன் வண்ண விருப்பங்களில் வெளிவரலாம் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications