Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000 விலைகுறைபப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஃப்லைன் கடைகளில் இந்த சாதனத்திற்கு ரூ.2000 வரை விலைகுறைக்கப்பட்டு இருப்பதை முதலில் 91mobiles வலைத்தளம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62  ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

அதன்படி சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.23,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.21,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் Flagship Fest sale எனும் தலைப்பில் நடைபெறும் சிறப்பு விற்பனையிலும் இந்த ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 7000 எம்ஏஎச் பேட்டரி வசதி, 64எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இருப்பதால் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி எஃப் 62  ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 சிறப்பம்சங்கள்

6.7' இன்ச் 1080x2400 பிக்சல் கொண்ட முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் பிளஸ் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 11 உடன் UI 3.1 இயங்குதளம்
ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 சிப்செட்
6 ஜிபி ரேம் / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை ஸ்டோரேஜ்
குவாட் ரியர் கேமரா அமைப்பு
64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
5 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
டூயல் நானோ சிம்
வைஃபை
புளூடூத் v 5.0
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
என்எப்சி
யூ.எஸ்.பி டைப்-சி
3.5 ஆடியோ ஜாக்
25W ஃபாஸ்ட் சார்ஜிங்
7,000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஃப் 62  ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

அண்மையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட் ஒன்று கிடைத்தது. அப்டேட் வெர்ஷன் எண் E625FDDU1AUB4 உடன் வருகிறது, மேலும் இது ஸ்மார்ட்போனுக்கு சமீபத்திய பிப்ரவரி பாதுகாப்பு பேட்சையும் கொண்டு வருகிறது. மேலும், இது கேமரா துறையிலும் மேம்பட்ட செயல்திறனைக் கொண்டுவருகிறது. ஒட்டுமொத்த சாதன நிலைத்தன்மையும் மேம்படுத்தப்பட்டுள்ளது இந்த புதிய அப்டேட்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 அப்டேட் சுமார் 180 MB அளவை கொண்டுள்ளது. புதிய அப்டேட் அண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்டது, இது யுஐ 3.1 உடன் உள்ளது. இப்போது இது அனைத்து சாம்சங் கேலக்ஸி எஃப் 62 பயனர்களுக்கு கிடைக்கிறது. Settings > Software Update > Download and Install கிளிக் செய்து அப்டேட்டை டவுன்லோட் செய்யலாம்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F62 Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X