Samsung கேலக்ஸி F62 தான் சாம்சங் வரிசையிலேயே மிகவும் ஸ்லிம் செட்.. அறிமுகம் எப்போ?
இந்தியாவில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சாம்சங்கின் உற்பத்தி தொழிற்சாலையில் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனின் உற்பத்தி துவங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால், Samsung Galaxy F62 எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி F62
சமீபத்திய அறிக்கை படி, சாம்சங் கேலக்ஸி F62 ஸ்மார்ட்போன் சாம்சங்கிலிருந்து வெளிவரும் மிகவும் ஸ்லிமான வடிவத்தில் வெளிவரும் ஹேண்ட்செட் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மாடல் எண் SM-E625F கொண்டு சாம்சங் கேலக்ஸி F62 முந்தைய Geekbench பெஞ்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் காணப்பட்டது.

எக்ஸினோஸ் 9825 சிப்செட்
பட்டியலின் படி, வரவிருக்கும் சாம்சங் எஃப்-சீரிஸ் ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் 9825 சிப்செட் உடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன், 6 ஜிபி ரேம் உடன் வரும் என்பதை இந்த பட்டியல் மேலும் வெளிப்படுத்துகிறது. இது அண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

கீக்பெஞ்ச் ஸ்கோர்
இந்த புதிய ஸ்மார்ட்போன் சமீபத்திய கீக்பெஞ்ச் ஸ்கோரிங்கில் 5 சிங்கிள் கோர் மற்றும் மல்டி கோர் விவரக்குறிப்புகளின் கீழ் முறையே 763 மற்றும் 1952 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது என்றும் இந்த அறிக்கையின் தகவல் தெரிவிக்கிறது.

அறிமுகம் எப்போது?
சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனின் பிற விவரங்கள் பற்றி பார்க்கையில், இது 6.5 இன்ச் / 6.7 இன்ச் இன்ஃபினிட்டி-வி டிஸ்பிளேவுடன், குவாட்-ரியர் கேமரா மற்றும் 7,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதி குறித்து சாம்சங் அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை. 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








