அட்டகாசமான Samsung Galaxy F62 பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனம் இன்று அதன் புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 62 (Samsung Galaxy F62) என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன் 7000 எம்ஏஎச் பேட்டரி உடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விபரங்கள் மற்றும் விற்பனை சலுகை போன்ற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 விலை
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் மாடலான 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 23,999 என்ற விலையிலும், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 25,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லேசர் ப்ளூ, லேசர் கிரீன் மற்றும் லேசர் கிரே வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 விற்பனை மற்றும் சலுகைகள்
புதிய சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ சில்லறை கடைகள் வழியாக பிப்ரவரி 22, மதியம் 12 மணி முதல் வாங்குவதற்குக் கிடைக்கும். இந்த போனுடன் உங்களுக்கு ரூ.3000 மதிப்புடைய கேஷ்பேக் ஜியோ ரீசார்ஜ் சலுகை, ரூ.7000 மதிப்பிலான ஜியோ கூட்டாளர்களின் கூப்பன்கள், ICICI வாடிக்கையாளர்களுக்கு ரூ.2500 வரை கேஷ்பேக் சலுகை ஆகியவை கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 சிறப்பம்சம்
- 6.7' இன்ச் 1080x2400 பிக்சல் கொண்ட முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் பிளஸ் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 11 உடன் UI 3.1 இயங்குதளம்
- ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 சிப்செட்
- 6 ஜிபி ரேம் / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை ஸ்டோரேஜ்
- குவாட் ரியர் கேமரா அமைப்பு
- 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- டூயல் நானோ சிம்
- வைஃபை
- புளூடூத் v 5.0
- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
- என்எப்சி
- யூ.எஸ்.பி டைப்-சி
- 3.5 ஆடியோ ஜாக்
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 7,000 எம்ஏஎச் பேட்டரி



Click it and Unblock the Notifications