Home
Mobile

தூக்குடா இந்த தங்கத்தை.. 5ஜி, 8GB ரேம், 50MP OIS கேமரா, HDR செல்பீ, 5000mAh பேட்டரி.. புது Samsung போன்!

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் கேலக்ஸி எப் சீரீஸின் கீழ் ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை எப் சீரிஸின் கீழ் அறிமுகமான எந்த ஸ்மார்ட்போனை விடவும் மிகவும் ஸ்லிம் ஆன டிசைனை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் என்ன? இதன் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? சாம்சங் நிறுவனம் மிகவும் அமைதியான முறையில் சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி (Samsung Galaxy F56 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்து உள்ளது. இது 8ஜிபி ரேம், எக்ஸினோஸ் 1480 சிப்செட், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளே, 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 5000mAh பேட்டரி ஆகிய அம்சங்களும் உள்ளன.

தூக்குடா இந்த தங்கத்தை.. புது Samsung போன் அறிமுகம்!

சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட சாம்சங்கின் லேட்டஸ்ட் ஓஎஸ் வெர்ஷன் ஆன ஒன் யுஐ 7 (One UI 7) கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் மற்றும் 6 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 1200 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் மோட் (HBM) மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், விஷன் பூஸ்டர் தொழில்நுட்பம் உடனான 6.7-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புறத்தில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் ப்ரொடெக்ஷனும் உள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, இது எக்ஸினோஸ் 1480 (Exynos 1480) சிப்செட் உடன் வருகிறது. இது 8ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஓஐஎஸ் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், இது 12-மெகாபிக்சல் எச்டிஆர் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. இதன் கேமரா செட்டப்பில் ஆப்ஜெக்ட் ஏரேசர் மற்றும் எடிட் சஜ்ஜஷன்ஸ் போன்ற பல ஏஐ இமேஜிங் அம்சங்களும் உள்ளன. இதன் ரியர் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் ஜூமிங்கை ழங்குகிறது மற்றும் 10-பிட் எச்டிஆர் இல் 30எப்பிஎஸ் இல் 4கே வீடியோக்களை பதிவு செய்யும் திறனையும் கொண்டுள்ளது

பேட்டரியை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. பாதுகாப்பிற்காக சாம்சங்கின் நாக்ஸ் வால்ட் அம்சத்தை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் டேப் அண்ட் பே செயல்பாட்டுடன் கூடிய சாம்சங் வாலட்டும் உள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இதுதான் எப் சீரிஸின் கீழ் அறிமுகமான மிகவும் ஸ்லிம் ஆன ஸ்மார்ட்போனாக உள்ளது. அளவீட்டில் இது 7.2 மிமீ உள்ளது!

சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: சம்சங்கின் இந்த லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.28,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்த விலைகளை - "அறிமுக விலை" என்று குறிப்பிடுகிறது. அதாவது இது ரூ.2000 வங்கி தள்ளுபடியை உள்ளடக்கிய விலையாகும். சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி ஸ்மார்ட்போன் க்ரீன் மற்றும் வயலட் கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் மற்றும் முன்னணி NBFC கூட்டாளர்கள் வழியாக மாதத்திற்கு ரூ.1,556 இல் தொடங்கும் ஈஸி இஎம்ஐ விருப்பங்களையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F56 5G Smartphone Launched in India Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X