அவசரப்பட்டு எந்த போனும் வாங்காதீங்க.. 50எம்பி கேமரா.. இந்தியாவுக்கு வரும் புது Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
சியோமி, விவோ, ஒப்போ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சாம்சங். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட சாம்சங் நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் சாம்சங் (Samsung) போன் வெளிவருகின்றன.
எனவே இந்தியாவில் சாம்சங் போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் ஒரு புதிய 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி (Samsung Galaxy F56 5G) எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F56 5G specifications): 6.7-இன்ச் சூப்பர் அமோலெட் பிளஸ் டிஸ்பிளே (AMOLED+ display) வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா இதில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுகக முடியும்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
5000mAh பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
சாம்சங் நிறுவனத்தின் எக்ஸிநோஸ் 1480 பிராஸசர் (Exynos 1480 processor) உடன் சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கேலக்ஸி எப்56 5ஜி போனில் உள்ளது. மேலும் இந்த போன் ரூ.27,999 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








