அதிரவிட்ட அமேசான்.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி (Samsung Galaxy f55 5g) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி செல்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனுக்கு 4 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,268 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.17268 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy f55 5g Specifications) : 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 × 2400 பிக்சல்கள். 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன். மேலும்ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilizyion Technology), 10x டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங், டூயல் ரெக்கார்டிங் (Dual Recording) உள்ளிட்ட கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். பின்பு IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன். பின்பு இதில் அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) ஆதரவும் உள்ளது. அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் வசதியும் உள்ளது.
photo credit: fonearena


Click it and Unblock the Notifications








