Home
Mobile

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல OIS கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அல்ட்ரா ஸ்லிம் வேகன் லெதர் பேனல் மட்டுமல்லாமல், அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா, 12ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட், 45W சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) வெளியாகிறது.

மே 27ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகமாகிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த சாம்சங் மாடலின் சிப்செட், கேமரா, பேட்டரி மற்றும் டிசைன் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருந்தும், விலை விவரங்கள் வெளியாகவில்லை. இப்போது, மார்கெட்டில் கசிந்து சாம்சங் பிரியர்களை மிரள விட்டுள்ளது.

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல OIS கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே!

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F55 5G Specifications): இந்த சாம்சங் போனில் 6.7 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே மாடலாகும்.

16 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது.

இந்த கேமராவில் 10x டிஜிட்டல் ஜூம், அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. ஆகவே, 4K தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். அதேபோல டூயல் ரெக்கார்டிங் (Dual Recording) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனில் 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

யாரு சாமி அவன்.. பட்ஜெட்ல OIS கேமரா.. 12GB ரேம்.. AMOLED டிஸ்பிளே!

இந்த கேமராவிலும் அல்ட்ரா எச்டி வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. இந்த சாம்சங் போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலும் வர இருக்கிறது.

1 டிபி மைக்ரோஎஸ்டி (MicroSD) ஸ்டோரேஜ் சப்போர்ட் உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வருகிறது. 4 ஜெனரேஷன் அப்கிரேட் சப்போர்ட் உடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

அதேபோல 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) வருகிறது. இந்த மாடலில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Fingerprint Sensor), கைரோ சென்சார் வருகிறது.

அதேபோல ஜியோமேக்னடிக் சென்சார், பிராக்சிமிடி சென்சார், லைட் சென்சார் போன்றவை வருகின்றன. ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2), வை-பை 802 (Wi-Fi 802), டைப்-சி இயர்ஜாக் (Type-C Earjack), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டி பீச்சர்கள் மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ வருகிறது.

கிளாசி வேகன் லெதர் பேக் பேனல் டிசைனில் பிளாக் (Black) மற்றும் ஆரஞ்ச் (Orange) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. 180 கிராம் எடை மற்றும் 7.8 மிமீ தடிமனில் ஸ்லிமஸ்ட் லெதர் பேனல் மாடலாக இருக்கிறது. மேற்கூறிய அம்சங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல பிளிப்கார்டில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மார்கெட்டில் விலை பட்டியல் கசிந்துள்ளது. ஆகவே, இந்த போனின் 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.26,999ஆகவும், 8ஜிபி + 256ஜிபி மாடலின் ரூ.29,999ஆகவும் இருக்கிறது.

மேலும், 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.32,999ஆகவும் இருக்கிறது. இந்த விலையிலேயே அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. அதேபோல ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் உடன் இந்த மாடல்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால், சலுகையுடன் இந்த விலை இருக்கவும் வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F55 5G With 8GB RAM Indian Price Tipped Ahead May 27 Launch Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X