Home
Mobile

வெளுத்து கட்டுது சேல்.. ரூ.16,000 பட்ஜெட்ல SAMSUNG.. லெதர் பேனல்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

சூப்பர் அமோலெட் பிளஸ் டிஸ்பிளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி மட்டுமல்லாமல், லெதர் பேனலுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) போனானது, இப்போது அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் கொண்ட இந்த சாம்சங் போனின் மார்கெட் விலை, டிஸ்கவுண்ட் விலை மற்றும் முழு பீச்சர்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி பிளிப்கார்ட் விற்பனை (Samsung Galaxy F55 5G Flipkart Sale): இந்த சாம்சங் போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.26,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் மார்கெட் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் மாடலின் மார்கெட் விலை ரூ.32,999ஆக இருக்கிறது.

வெளுத்து கட்டுது சேல்.. ரூ.16000 பட்ஜெட்ல SAMSUNG.. லெதர் பேனல் மாடல்!

இப்போது, மூன்று மாடல்களும் விலை குறைப்பில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலானது, இப்போது ரூ.16,750 பட்ஜெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக ஆர்பிஎல் கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.16,000 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இது ரூ.10,999 விலை குறைப்பில் கிடைப்பதாகும்.

பிரீமியம் லுக் கொடுக்கும்படி வீகன் லெதர் பேனலுடன் அப்ரிகாட் கிரஷ் (Apricot Crush) மற்றும் ரைசின் பிளாக் (Raisin Black) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. மெட்டாலிக்-லைக் பினிஷிங் கொண்ட மிடில் ஃபிரேம் மற்றும் டிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. எப்படி பார்த்தாலும், டிசைனில் பிரீமியம் காட்டுகிறது. இப்போது, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F55 5G Specifications): இந்த கேலக்ஸி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஒன் யுஐ 6.1 (One UI 6.1) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் கிடைக்கிறது. 4 ஓஎஸ் அப்டேட் கிடைப்பதால், லேட்டஸ்ட் மாடல்களுக்கு நிகரான யுஐ எதிர்பார்க்கலாம்.

வெளுத்து கட்டுது சேல்.. ரூ.16000 பட்ஜெட்ல SAMSUNG.. லெதர் பேனல் மாடல்!

அதேபோல 5 வருட செக்யூரிட்டி அப்டேட் மற்றும் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட்டுக்கு ஏற்ப அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டை பேக் செய்துள்ளது. மிட்-ரேஞ்ச் மாடல்களில் கிடைக்கும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த டெக்னாலஜியுடன் 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா-வைடு ஆங்கிள் வருகிறது.

இதுபோக 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 6.7 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, IP67 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F55 5G With 8GB RAM Available Under Rs 17000 in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X