அசூர விற்பனை.. ரூ.24,999 போதும்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த சாம்சங் பிரியர்களும் பிளிப்கார்ட் தளத்தில் குவியும்படியான டிஸ்கவுண்ட்டில் ஓஐஎஸ் கேமரா, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 45W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் வேகன் லெதர் பேனலோடு சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) கிடைக்கிறது.
ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் சிப்செட், 4 ஓஎஸ் அப்கிரேட்களுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற மற்ற பீச்சர்களும் மிரளவிடும்படி இருக்கின்றன. பட்ஜெட்டில் அல்ட்ரா பீரிமியம் லுக் மட்டுமல்லாமல், பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F55 5G Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் மற்றும் மிட்-ரேஞ்ச் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) வருகிறது. இந்த மாடலுக்கு 5 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) மற்றும் 4 ஜெனரேஷனுக்கான ஓஎஸ் அப்கிரேட்கள் வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கிறது.
மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது. 3 மாடல்களிலும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot) கொண்டுள்ளது. இந்த எப்55 5ஜி போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா உள்ளது. இந்த கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus), ஓஐஎஸ் (OIS) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. மேலும், 10x டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ரியர் கேமராவை போலவே 4K ரெக்கார்டிங் உடன் 50 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனில் 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Infinity-O Display) மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டி மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டுள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. ஆப்ரிகாட் க்ரஷ் (Apricot Crush) மற்றும் ரைசின் பிளாக் (Raisin Black) கலர்களில் வேகன் லெதர் பேனல் டிசைனில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது.
அதேபோல 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,999ஆகவும், 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.32,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அறிமுக சலுகையில் ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனை ரூ.24,999 பட்ஜெட்டில் வாங்கலாம். பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








