தீயா இருக்கு பாக்கவே.. Samsung இன் அடுத்த பட்ஜெட் Mobile.. புதுசா வேற எந்த போனும் வாங்காதீங்க..
புதிதாக எந்தவொரு ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனத்தையாவது நீங்கள் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், உங்கள் எண்ணத்திற்கு கொஞ்சம் பிரேக் போட்டு வையுங்கள். சாம்சங் (Samsung) நிறுவனம் புதிதாக ஒரு அல்டிமேட் ஸ்மார்ட்போனை நாளை அறிமுகம் செய்கிறது.
சாம்சங் (Samsung) நிறுவனம், இந்த ஆண்டு மே மாதம் 16ம் தேதி அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனமான சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) என்ற போனை அறிமுகம் செய்யவிருந்தது. ஆனால், சாம்சங் நிறுவனம் இந்த போனின் அறிமுகத்தை தேதியை மே 27ம் தேதி அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது. ஆம், சாம்சங் நிறுவனம் இதன் அறிமுகத்தை போஸ்ட்பாண்ட் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி (Samsung Galaxy F55 5G):
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) போனின் அறிமுகத்திற்கு முன்பாக, இதன் விலை மற்றும் சிறப்பம்சம் தகவல்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சமீபத்தில் வெளியான லீக் தகவலின் படி, புதிய சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் மூன்று வேரியண்ட் மாடல் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆம், இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி ஸ்மார்ட்போன் 8GB+128GB ஸ்டோரேஜ் உடன் ரூ. 26,999 விலையிலும், இதன் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ. 29,999 விலையிலும் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இறுதியாக, இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி போனின் 12GB+256GB ஸ்டோரேஜ் உடன் ரூ. 32,999 விலையிலும் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் ரூ.2,000 மதிப்பிலான வங்கி அட்டை சலுகையை பெரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி போனின் சிறப்பம்சம் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம். வெளிவரவிருக்கும் புதிய சாம்சங் மொபைல் (Samsung Mobile) 6.7" இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி சிறப்பம்சம் (Samsung Galaxy F55 5G Specifications):
இது sAMOLED பிளஸ் டிஸ்பிளேவுடன் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே FHD+ ஆதரவுடன் 1000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி சாதனம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 1 chipset) உடன் வெளிவரும்.
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஃப்55 5ஜி ஸ்மார்ட்போன் டிவைஸ் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது 50MP OIS ஆதரவுடன் மெயின் கேமரா + 8MP அல்ட்ராவைடு கேமரா + 2MP மேக்ரோ கேமரா கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராவை கொண்டிருக்கும். முன்பக்கத்தில், இந்த சாதனம் 50MP செல்பி கேமராவை கொண்டிருக்கும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது.
இது 5000mAh பேட்டரி உடன் இது 45W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ஆதரிக்கும் ஸ்மார்ட்போனாக வெளிவரும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஒன யுஐ 6.0 உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. நாளை இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








