Home
Mobile

அமேசான் அதிரும்.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி (Samsung Galaxy f55 5g) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது அமசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போனுக்கு 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த போனை ரூ.16499 விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் அதிரும்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy f55 5g Specifications) : குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன். பின்பு இதில் அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) ஆதரவும் உள்ளது.

குறிப்பாக 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே உடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1080 × 2400 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன் 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilizyion Technology), 10x டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங், டூயல் ரெக்கார்டிங் (Dual Recording) உள்ளிட்ட கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

அமேசான் அதிரும்.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும். IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.

5000mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F55 5G phone available at discounted price on Amazon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X