ஆபரில் Samsung 5ஜி போன்.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 45W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி (Samsung Galaxy F55 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி செல்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் ரூ.17999 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy f55 5g Specifications): இந்த சாம்சங் போன் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் பிளஸ் (Super AMOLED Plus) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 × 2400 பிக்சல்கள். 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி ஸ்மார்ட்போன்.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் சாம்சங் ஒன் யுஐ 6.1 (Samsung One UI 6.1) மூலம் இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி டெப்த் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன் . மேலும்ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilizyion Technology), 10x டிஜிட்டல் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங், டூயல் ரெக்கார்டிங் (Dual Recording) உள்ளிட்ட கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

5000mAh பேட்டரி உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். பின்பு IP67 வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications








