மே 27 வரை காத்திருங்க.. 50MP செல்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. இந்தியாவுக்கு வரும் சாம்சங் போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி (Samsung Galaxy F55) ஸ்மார்ட்போனை நாளை (மே 17) அறிமுகம் செய்ய திட்டமிட்ட நிலையில் அதை மே இறுதிக்குத் தள்ளி வைத்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி ஸ்மார்ட்போனை மே 17-ம் தேதி அறிமுகம் செய்யத் திட்டமிட்ட நிலையில், அது தள்ளி வைக்கப்பட்டது. மேலும் சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி வரும் மே 27-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக வெளியீட்டுத் தாமதத்திற்கான காரணத்தை சாம்சங் நிறுவனம் கூறவில்லை. மேலும் ஏற்கனவே வெளியான இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F55 5G Specifications): 6.7-இன்ச் சூப்பர் அமோஎல்இடி பிளஸ் டிஸ்பிளேவை (Super AMOLED Plus display )கொண்டுள்ளது இந்த போன். மேலும்1080 x 2400 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 1 chipset) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் மாடல். பின்பு ஒன் யுஐ 6.0 ( One UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ஆனது இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி செல்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் வீகன் லெதர் பினிஷ் (Vegan Leather Finish) உடன் குறைந்தது 2 கலர் ஆப்ஷன்களில் வெளிவரும் இந்த போன்.

அதாவது அப்ரிகாட் க்ரஷ் (Apricot Crush) மற்றும் ரைஸன் பிளாக் (Raisin Black) என்கிற 2 கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி போன் அறிமுகமாகும்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எப்55 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.30,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








