108எம்பி ரியர் கேமராவுடன் தரமான 5ஜி போனை இறக்கிவிடும் Samsung: அறிமுகம் எப்போது தெரியுமா?
விவோ, மோட்டோ, ஒன்பிளஸ், சியோமி நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது சாம்சங் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங்.
அதாவது இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, சாம்சங் நிறுவனம் இந்த ஏப்ரல் மாதம் இறுதியில் சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் அட்டகாசமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் sAMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 1080 x 2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.
சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிமைரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 1380 பிராசஸர் வசதியுடன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
8ஜபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 199 கிராம் எடையுடன் இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எப்54 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த சாம்சங் 5ஜி போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ,டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி போன். குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications